பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, கொரோனா பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, அரசு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் பேசி உள்ளார். இவரின் இந்த செயலுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர், நடிகர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கு திரையுலகை தாண்டி, இவருக்கு பல கோலிவுட் ரசிகர்களும் உள்ளனர். குறிப்பாக பெண் ரசிகர்கள் இவருக்கு அதிகம்.

இந்நிலையில், சீனாவின் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவி உள்ளது. இந்தியாவில் தமிழ் நாடு உட்பட, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்

மேலும் யாருக்கும் பரவாமல் தடுக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி, செல்போன் மூலம் யாரையாவது தொடர்பு கொண்டால், முதலில் விழிப்புணர்வு மெசேஜ் கொடுக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்தது தான்.

தற்போது ஆந்திராவில், நடிகர் விஜய் தேவரகொண்டா கொரோனா வைரஸ் பற்றி மக்கள் அச்ச பட வேண்டியது இல்லை, என்றும் கோரோனோவில் இருந்து பாதுகாத்து கொள்ள பண்ண வேண்டியது என்ன? அவரச அழைப்பு எண் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 

 

இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது, மேலும் இவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகிறார்கள்.