samantha : பிறந்தநாளன்று நள்ளிரவில் விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்... கண்கலங்கிய சமந்தா - வைரலாகும் வீடியோ
samantha : சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா.
நடிகை சமந்தா நேற்று தனது 35-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும் அவரது பிறந்தநாளை மேலும் சிறப்பிக்கும் விதமாக அவர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நேற்று வெளியானது.
இப்படத்தில் சமந்தா நடித்துள்ள கதிஜா கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருவதால், சமந்தா மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளார். இதுதவிர அவர் நடிப்பில் உருவாகி உள்ள சரித்திர கதையம்சம் கொண்ட சகுந்தலம் படத்தில் இருந்து சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, அப்படக்குழு சமந்தாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது.
இவற்றையெல்லாம் விட சமந்தாவுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் தந்தது விஜய் தேவரகொண்டா தான். நடிகை சமந்தா தற்போது சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
நேற்று சமந்தாவின் பிறந்தநாளை நள்ளிரவு 12 மணிக்கு கொண்டாட திட்டமிட்ட படக்குழு, போலியாக ஒரு சீனை தயார் செய்து சமந்தாவை நடிக்க வைத்துள்ளனர். சமந்தா அழுதபடி அந்த சீனில் நடிக்க வேண்டும் என்றும் இயக்குனர் கூறி இருந்தார். இதையடுத்து சமந்தா அழுதபடி அந்த சீனில் நடித்துக் கொண்டிருக்கும் போது அருகில் அமர்ந்திருந்த விஜய் தேவரகொண்டா, பிறந்தநாள் வாழ்த்து சொன்னதும் ஷாக் ஆனார் சமந்தா.
பின்னர் தான் அவருக்கு இது போலியான சீன் என தெரியவந்தது. விஜய் தேவரகொண்டாவின் இந்த சர்ப்ரைஸை சற்றும் எதிர்பார்க்காத சமந்தா உற்சாகத்தில் திளைத்துப் போனார். பின்னர் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதுகுறித்த வீடியோ டுவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... Arun Prasath : பிரபல சீரியல் நடிகையை காதலிக்கும் பாரதி கண்ணம்மா ஹீரோ - பாரதியின் காதலி யார் தெரியுமா?