விஜய் தேவரகொண்டா  VD 12-ஆவது படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் அமோகமாக ஆரம்பமாகி உள்ளது. 

விஜய் தேவரகொண்டா, தீவிரமான ஒரு ஆக்‌ஷன் திரில்லர் கதைக்காக 'ஜெர்சி' புகழ் கௌதம் தின்னனுரியுடன் இணைந்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்திற்கு தற்காலிகமாக 'VD12' என்று தலைப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. 

ஹைதராபாத்தில் உள்ள சாரதி ஸ்டுடியோவில் தொடங்கிய இந்த படப்பிடிப்பில், படத்தின் முன்னணி நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர். மேலும் விஜய் தேவரகொண்டாவின் புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில், விஜய் தீவிரமாக துப்பாக்கியை பிடித்துள்ளார். அதே சமயம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் அழகில் இருக்கிறார். இந்த முதல் கிளிம்ப்ஸ் போஸ்டரில் அவரது தோற்றம் அவுட் ஆஃப் போகஸில் உள்ளதால் படத்திற்காக அவர் எப்படி மாறியுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஸ்ரீதேவி முதல் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் வரை... பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டு அழகான 15 ஹீரோயின்கள்!

கௌதம் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீ லீலா நாயகியாக நடித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தளபதி பிறந்தநாளில் காத்திருக்கும் விருந்து! 'லியோ' படத்தில் இருந்து வெளியாகும் 'நா ரெடி...' முதல் சிங்கிள்!

இதை தொடர்ந்து, சமீபத்தில் தான் தெலுங்கில் நடிகை சமந்தாவுடன் இவர் நடித்து வந்த குஷி படம் நிறைவடைந்தது. VD 12 படத்தை தொடர்ந்து, தன்னுடைய அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சீதா ராமம் பட நடிகை மிருணாள் தாக்கூர் நடிக்கிறார். கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.