கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து, மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள,  சுகாதாரத்தோடு இருக்கும் படியும், குறிப்பாக அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது, முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அரசு சார்பிலும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள்.

மேலும் மக்கள் அனைவரும் அதிக படியாக மாஸ்க் பயன்படுத்துவதால், மருத்துவர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருப்பவர்களுக்கு மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

இதனை சரி செய்யும் விதமாக, மக்களுக்கும், ரசிகர்களுக்கும் சூப்பர் ஐடியா கொடுத்தார், பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா. இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், மாஸ்க்குகளை மருத்துவர்களுக்கு விட்டு விடுவோம்.

வெளியில் செல்லும் போது, கைக்குட்டை, ஸ்காப், போன்றவற்றை பயன்படுத்தலாம் என கூறியுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் தேவரகொண்டா, கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான டியர் காம்ரேட், வேர்ல்ட் பேமெஸ் லவ்வர் போன்ற படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெற வில்லை.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும், பைட்டர் படத்தில் நடித்து வருகிறார்.