2019ம் ஆண்டு விடைபெற இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது. எனவே இந்த ஆண்டு நடந்த சிறப்பான, தரமான சம்பவங்களின் பட்டியல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ் திரையுலகிற்கு சிறந்த ஆண்டாக அமைந்த இந்த ஆண்டு, பல நடிகர்களுக்கு மாஸ் ஓப்பனிங்கை கொடுத்துள்ளது. ரஜினி, விஜய், அஜித் ஆகிய மாஸ் ஹீரோக்களில் ஆரம்பித்து, சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் வரை அனைவரது படங்களும் வெற்றியை தழுவியது. 

அந்த வகையில் 2019ம் ஆண்டு பட வசூலை வாரிக்குவித்த டாப் 10 படங்களின் பட்டியலை ரோகிணி திரையரங்கம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி, விஜய் - அட்லி கூட்டணியில் வெளியான "பிகில்" திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது. ஏற்கனவே வசூலில் பல சாதனைகளை படைத்துள்ள "பிகில்" திரைப்படம், இதில் மற்றொரு மாபெரும் சாதனையை படைத்துள்ளது. 

எப்போதும் ரோகிணி திரையரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் மட்டுமே வசூலை வாரிக்குவிக்கும். ஆனால் இந்த முறை தளபதி விஜய்யின் "பிகில்" திரைப்படம் மாஸ் காட்டியிருக்கிறது. ரஜினி கோட்டையில் விஜய் கொடி நாட்டிய செய்தியைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். 

டாப் 10 பட்டியலில் கடந்த ஆண்டு பொங்கல் விருந்தாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "பேட்ட" திரைப்படம் இரண்டாவது இடத்திலும், தல அஜித் நடிப்பில் வெளியான "விஸ்வாசம் திரைப்படம்" 3வது இடத்திலும் உள்ளது. அதனைத் தொடர்ந்து சூர்யாவின் 'என்ஜிகே'
, ஹாலிவுட் திரைப்படமான 'அவஞ்சர்ஸ் எண்ட்கேம்', கார்த்தியின் 'கைதி', தனுஷின் 'அசுரன்' ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.