Beast update : துப்பாக்கி படம் போலவே விஜய் பீஸ்ட் -ல் ராணுவ வீரராக நடிப்பதாகவும், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று விஜயின் ராணுவ வீரர் கெட்டப் குறித்த போஸ்டர் வெளியாகும் எனவும் தகவல் கசிந்துள்ளது...
கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ள நெல்சன் மண்டேலா இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், மூன்று வில்லன்களில் ஒருவராக செல்வராகவனும் இவர்களுடன் யோகி பாபு உள்ளிட்டோரும் இணைந்து நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிரூத் 'பீஸ்ட்' படத்திற்கும் இசையமைக்கிறார். ஜார்ஜியா, சென்னை, டெல்லியென பிரமாண்ட செட்களுடன் உருவாகி வரும் இந்த படம் வரும் ஏப்ரலில் திரைக்கான உள்ளது.

இந்தபடத்திலிருந்து விஜய் ட்ரம்ஸ் வாசிப்பது போன்ற புகைப்படம் வெளியாகி செம வைரலானது. இந்நிலையில் துப்பாக்கி படம் போலவே விஜய் பீஸ்ட் -ல் ராணுவ வீரராக நடிப்பதாகவும், ஜனவரி 26 குடியரசு தினத்தன்று விஜயின் ராணுவ வீரர் கெட்டப் குறித்த போஸ்டர் வெளியாகும் எனவும் தகவல் கசிந்துள்ளது...
