விஜய்ஆண்டனி நடிக்கும் “வள்ளி மயில்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு! படக்குழு வெளியிட்ட அப்டேட்!

பிச்சைக்காரன் 2 படத்தின் வெற்றிக்கு பின்னர், தற்போது விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்து வரும், 'வள்ளி மயில்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

vijay antony starring valli mayil last schedule shooting update

நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில், தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிப்பில்,  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்கிற இடத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனி, சுசீந்திரன் இயக்கத்தில், 1980 களின் காலகட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகி வரும் “வள்ளி மயில்” என்கிற படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல், கொடைக்கானல், சிறுமலை, பழநி, மதுரை, திருநெல்வேலி மற்றும் தென்னகத்தின் பல பகுதிகளில் பரபரப்பாக நடந்து வருகிறது. 

சமீபத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 வெற்றிக்குப் பிறகு இன்று, வள்ளி மயில் படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி கலந்து கொண்டு நடித்துள்ளார். படக்குழுவினர் அவரை உற்சாகமாக வரவேற்று பிச்சைக்காரன் 2 படத்தின் 25 ஆவது நாள் வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். 

vijay antony starring valli mayil last schedule shooting update

டீப் நெக் ஜாக்கெட் அணிந்து.. சேலை அழகில் சுழட்டி போடும் ஷிவானி!

மேலும் 1980களில், நாடக கலையின் பின்னணியில் நடக்கும் ஒரு புதுமையான  டிராமா த்ரில்லராக  வள்ளி மயில் திரைப்படம் உருவாகிறது. 1980 கால கட்ட கதை என்பதால் முன்னதாக திண்டுக்கல் மாநகரில் 1980 காலகட்ட பின்னணியைக் கண் முன் கொண்டு வரும் வகையில், 1 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு,  இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்றது. 

vijay antony starring valli mayil last schedule shooting update

தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு 24 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ளது. இத்துடன் படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிவடையவுள்ளது.  இப்படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்க, ஃபரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். பாரதிராஜா, சத்யராஜ், புஷ்பா படப்புகழ் சுனில்,தம்பிராமையா, GP முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

விரைவில் இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகும் கணேஷ் வெங்கட்ராம்! கர்ப்பமாக இருக்கும் நிஷாவின் புகைப்படம் வைரல்!

இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவில்,  ஆண்டனி படதொகுப்பு செய்கிறார், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் முடியவுள்ள நிலையில், டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios