நடிகர் விஜய் மாணவிகள் தோள்மேல் கைபோட்டு போட்டோவுக்கு போஸ் கொடுப்பதை தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த வேல்முருகன் விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு மாணவி ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Vijay Fan Girl Slams Velmurugan : நடிகர் விஜய் அரசியலில் நுழைய முடிவெடுத்த கையோடு, 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளை கெளரவிக்க முடிவெடுத்து, கல்வி விருது விழாவை ஏற்பாடு செய்தார். கடந்த 2023-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் இவ்விழா, இந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த வருடம் மூன்று கட்டங்களாக இந்த கல்வி விருது விழா நடைபெற்றுள்ளது. அதில் முதல் இரண்டுகட்ட விழா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட விழாவை இன்று நடத்தி இருக்கிறார் விஜய்.

இந்த விழாவில் கலந்து கொள்ள 51 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அவர்களை ஒவ்வொருவராக மேடைக்கு அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறார் விஜய். இப்படி விஜய் செய்யும் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும், மறுபுறம் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டது. நடிகர் விஜய் இதை பப்ளிசிட்டிக்காக செய்து வருவதாக சிலர் விமர்சித்தனர்.

வேல்முருகனின் குற்றச்சாட்டுக்கு விஜய் முன்னிலையில் பதிலடி

அதற்கு ஒருபடி மேலே போய், நடிகர் விஜய்யை தரக்குறைவாக விமர்சனம் செய்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. 2 கிராம் தங்கத்துக்காக ஒரு கூத்தாடியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கின்றனர் என்றும், விஜய் அனுமதியின்றி மாணவிகளை தொடுவதாகவும் கூறி இருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். ஆனால் விஜய் இதற்கு எந்தவித பதிலடியும் கொடுக்காமல் சைலண்டாக இருந்து வந்தார்.

இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற கல்வி விருது விழாவில் விஜய் கையால் பரிசு வாங்க வந்த மாணவி ஒருவர், விஜய் முன்னிலையில், வேல்முருகனுக்கு தக்க பதிலடி கொடுத்தார். அதில், அந்த மாணவி பேசுகையில், விஜய் தோள் மேல கை போடுறாங்கனு சொல்லி வீடியோ வந்துச்சு. ஆனால் அவர் எங்கள் தோள்மீது கைபோடும்போது அவரை எங்க அப்பாவாக, ஒரு அண்ணனாக, ஒரு உயிராக அவரை பார்க்கிறோம். அவருக்காக நாங்க உயிரா இருக்கோம். தேங்க் யூ அப்பா என விஜய்யை பார்த்து அந்த மாணவி சொன்னதும், அவரது தோள் மேல் கைபோட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் விஜய். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…