பல முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்களில் எடிட்டராகவும், மாலை நேரத்து மயக்கம் படத்தின் தயாரிப்பாளருமான கோலா பாஸ்கர் உடல்நல குறைவு காரணமாக மரணமடைந்துள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் எடிட்டராக பணிபுரிந்தவர் கோலா பாஸ்கர். இவர் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ’7ஜி ரெயின்போ காலனி’ ’ புதுப்பேட்டை’ ஆயிரத்தில் ஒருவன்’ போன்ற படங்களை படத்தொகுப்பு செய்தவர். மேலும் விஜய்  நடித்துள்ள ’போக்கிரி’ தனுஷின் ’யாரடி நீ மோகினி’ ஆகிய பல படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி இயக்கிய ’மாலை நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படத்தை தயாரித்தும் உள்ளார்.   இந்த படத்தில் இவருடைய மகன் பாலகிருஷ்ணா கோலா ஹீரோவாக அறிமுகமானார் இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியடைய வில்லை என்றாலும், நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் கோலா பாஸ்கர் கடந்த சில நாட்களாக தொண்டப்புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கோலா பாஸ்கரின் இந்த திடீர் மரணம், திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமூக வலைத்தளம் மூலம் தொடர்ந்து பலர் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.