தளபதி விஜய், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக தன்னுடைய 63-வது படத்தில் கைகோர்த்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு,  சென்னையில் மிகப் பிரம்மாண்டமான செட் அமைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

விஜய் இந்த படத்தில் ஃபுட் பால் பயிற்சியாளராக நடிக்கிறார், இரண்டு வேடத்தில் நடிக்கிறார், என ஒரு சில தகவல்கள் வெளியான போதிலும், இதுவரை இந்த படத்தின் தலைப்பு மற்றும் விஜயின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியாகவில்லை. இதற்காக விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டிருப்பதாக அடிக்கடி சமூக வலைத்தளத்தில் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 22ஆம் தேதி, தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்த படத்திற்கு மைக்கல், கேப்டன் மைக்கேல்,  சிஎம், வெறி, என பல்வேறு தலைப்புகள் யூகங்களின் அடிப்படையில் வெளியாகி வருகிறது.  ஆனால் இதுவரை இதுபோன்ற தகவல்களை படக்குழுவினர் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் ஏ.ஜி.எஸ் நிறுவனத்தில் வேலையில் இருப்பதாக கூறி சமூகவலைதளத்தில் ஒருவர் 63 படத்தின் தலைப்பு குறித்து ஓவர் பில்டப் செய்து கூறியுள்ளார்.  இது குறித்து அவர் கூறுகையில்,  "விஜய் 63 வது படம் பற்றிய தகவல்கள் மிக விரைவில் வெளியாக உள்ளதாகவும்,  இந்த படத்தின் டைட்டில் அபாரம், அழகு, ஆச்சரியம் என அனைவரையும் வியக்க வைக்கும் வகையில் இருக்கும் என ட்விட் செய்துள்ளார். 

மேலும் இந்த படத்தின் டைட்டில் இதுவரை கேள்விப்படாத ஒரு பெயராகத்தான் இருக்கும் என்றும்,  அகராதியில் தான் இதற்க்கான அர்த்தம் தேட வேண்டும் என கூறியுள்ளார்.  இது எந்த அளவிற்கு உண்மை என இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும், அதுவரை காத்திருப்போம்.