MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • 30 வருட பகையை மறந்து முதல் முறையாக பாண்டியன் வீட்டிற்கு வந்த முத்துவேல் பிரதர்ஸ்: ஒன்று சேர்ந்த Family: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

30 வருட பகையை மறந்து முதல் முறையாக பாண்டியன் வீட்டிற்கு வந்த முத்துவேல் பிரதர்ஸ்: ஒன்று சேர்ந்த Family: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!

Muthuvel Brothers in Pandiyan House: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் பாண்டியன் குடும்பம் சிக்கலில் இருக்கும் நிலையில், பகையை மறந்து முத்துவேலும் சக்திவேலும் பாண்டியன் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்த மாற்றத்தால் 2 குடும்பமும் ஒன்று சேருமா? பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 04 2026, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Pandiyan Stores 2 Muthuvel and Sakthivel entry
Image Credit : Jio Hot Star

Pandiyan Stores 2 Muthuvel and Sakthivel entry

கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக பாண்டியன் குடும்பமும், முத்துவேல் சக்திவேல் குடும்பமும் பேசாமல் பகையாக இருக்கின்றனர். இதில் எப்படியாவது பாண்டியனை பழி வாங்க வேண்டும் என்று முத்துவேல் மற்றும் சக்திவேல் இருக்கும் போது இன்று இருவரும் பாண்டியன் வீட்டிற்கு முதல் முறையாக வந்துள்ளனர். அவர்கள் மட்டுமின்றி அவர்களது மனைவிகளான வடிவு மற்றும் மாரி இருவரும் வந்துள்ளனர். தங்கமயிலிடமிருந்து விவாகரத்து பெற அவருக்கு சரவணன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதனால் அதிர்ச்சியடைந்த பாக்கியம், தனது மகளுக்காக பாண்டியன் குடும்பத்தை பழி வாங்க போலீஸ் ஸ்டேஷனில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார்.

26
Pandiyan Stores 2 Today Episode Twist
Image Credit : Jio Hot Star

Pandiyan Stores 2 Today Episode Twist

இந்த புகாரின் அடிப்படையில் பாண்டியன் குடும்பத்தில் மீனா மற்றும் குழலியைத் தவிர ஒட்டு மொத்த அனைவரையும் போலீசார் விசாரிக்க அழைத்துச் சென்றனர். என்னதான் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டாலும், தங்கமயில் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாண்டியன் குடும்பத்தினர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்தனர், இதில் விதிவிலக்காக ராஜீ மற்றும் அரசி இருவர் மீதும் பெரியளவில் குற்றமில்லை என்று கூறி அவர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படவில்லை. கோமதியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை விடுவித்திருக்கலாம். ஆனால், விடவில்லை. மேலும், இதில் முழுவதுமாக தொடர்பு உள்ளது சரவணன் மட்டுமே. அதனால், தன்னை அடிங்க, ஜெயிலில் கூட போடுங்க. தனது குடும்பத்தை விட்டுவிடுங்க.

36
Muthuvel Brothers in Pandiyan House
Image Credit : Jio Hot Star

Muthuvel Brothers in Pandiyan House

அம்மா பாவம், அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று கெஞ்ச, எந்த ஆக்‌ஷனும் இல்லை. கோமதியின் அண்ணன்கள் முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் பகையை மறந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து அவருக்காக நின்றனர். இன்ஸ்பெக்டரிடமும் பேசினர். ஆனால், அவர்கள் தங்கமயில் கொடுத்த புகாரில் உறுதியாக இருந்தனர். அவர்கள் பேசியதால் ராஜீ மற்றும் அரசியை அனுப்பி வைத்தனர். பிறகு மற்ற அனைவரையும் ஜெயிலில் அடைத்தனர். ஒரு நாள் முழுவதும் ஜெயிலில் இருக்க வேண்டும். அடுத்த நாள் கோர்ட்டுக்கு கூட்டிச் சென்ற பிறகு ஜாமீனில் எடுத்துக் கொள்ளலாம் என்று முத்துவேல் நம்பிக்கையில் இருக்கிறார்.

46
Gomathi Brother Muthuvel supports Pandiyan
Image Credit : Jio Hot Star

Gomathi Brother Muthuvel supports Pandiyan

பாண்டியன், சரவணன், செந்தில் மற்றும் கதிரை ஒரு ஜெயிலிலும், கோமதியை மற்றொரு சிறையிலும் அடைத்தனர். ராஜீ, அரசியை வீட்டிற்கு கூட்டி வந்த முத்துவேல், அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பிறகு பழனிவேல் வந்து கூப்பிடவே முத்துவேல் பிரதர்ஸ் முதல் முறையாக 30 வருட பகையை மறந்து பாண்டியன் வீட்டிற்கு சென்றனர்.

56
Muthuvel Brothers in Pandiyan House
Image Credit : Jio Hot Star

Muthuvel Brothers in Pandiyan House

அவர்கள் மட்டுமின்றி வடிவு மற்றும் மாரி இருவரும் சென்றனர். காந்திமதியும் சென்றார். அவர் ஏற்கனவே கோமதி வீட்டிற்கு சென்றிருக்கிறார். முத்துவேல் மற்றும் சக்திவேல் இருவரும் வீட்டிற்கு வருவதை பார்த்த மீனா, அரசி மற்றும் ராஜீ என்ன பேசுவது என்று தெரியாமல் திகைத்து நின்றனர். இருந்தாலும் அவர்களுக்கு முத்துவேல் பிரதர்ஸ் தான் இப்போது இருக்கும் ஒரே ஆறுதல். என்ன வேண்டுமானாலும் தங்களை கூப்பிடலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

66
Pandiyan Stores 2 Family Reunion
Image Credit : Jio Hot Star

Pandiyan Stores 2 Family Reunion

தனி சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோமதி நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் முடிந்தது. இதில், என்ன சுவாரஸ்யம் என்றால் இப்போது ஒன்று சேர்ந்த குடும்பம் அப்படியே இருக்குமா? அல்லது மீண்டும் பகையால் பிரிந்துவிடுமா என்பது தான் கேள்வி. அதோடு அரசி மற்றும் குமரவேல் இருவரும் காதலித்து திருமணம் செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தனித்தனி அறையில் கணவர், மகன்கள்: ஜெயிலில் மயங்கி விழுந்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஷாக்!
Recommended image2
பாரு - கம்ருதீன் கேம் ஓவர்... ரெட் கார்டு கொடுத்த விஜய் சேதுபதி - பிக் பாஸ் ரசிகர்கள் செம ஹாப்பி..!
Recommended image3
பார்வதி செஞ்சது தப்புன்னா பிக் பாஸ் தடுத்து நிறுத்திருப்பார் - பாருவுக்கு வக்காலத்து வாங்கிய வியானா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved