- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தனித்தனி அறையில் கணவர், மகன்கள்: ஜெயிலில் மயங்கி விழுந்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஷாக்!
தனித்தனி அறையில் கணவர், மகன்கள்: ஜெயிலில் மயங்கி விழுந்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் ஷாக்!
Pandian Stores 2 Serial Gomathi Faints In Jail : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சிறையில் அடைக்கப்பட்ட கோமதி மயக்கம் போட்டு கீழே விழுந்த காட்சி ரசிகர்களை கதி கலங்க வைத்துள்ளது.

Pandian Stores 2 Serial Gomathi Faints In Jail Family Separation Drama
சிறையில் அடைக்கப்பட்ட கோமதி நெஞ்சை பிடித்து கொண்டு கீழே விழுந்த காட்சி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அவருக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று பதறும் நிலை ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது என்று பார்க்கலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. முதல் சீசனுக்கு கிடைத்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்பா மகன் கான்செப்டை வைத்து 2ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து அதனால் வரும் பிரச்சனைகள், திருமணத்திற்கு பிறகான பிரச்சனைகள் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
Pandiyan Stores 2 Serial Latest Emotional Scene
இதில் பாண்டியன் பார்த்து சரவணன் மற்றும் தங்கமயில் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தார். இதில் தங்கமயில் வீட்டார் திருமணத்தின் போது எம்.ஏ படிப்பு, 2 வயது குறைவு என்று பொய் சொல்லி சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக சரவணனுக்கு எல்லா உண்மைகளும் தெரிய வந்துள்ளது. ஆனால், தங்கமயில் தன் மீது தவறுகளை மறைக்க அடித்து துன்புறுத்துகிறார், வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்லவே குடும்பத்தில் பூகம்பம் வெடிக்க ஆரம்பித்தது.
Vijay TV Serial Pandiyan Stores 2 Update
ஒரு கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளான சரவணன் உண்மைகளை மறைக்க முடியாமல் எல்லாவற்றையும் கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து தங்கமயில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட பின்னர் தர்ணாவில் ஈடுபட்ட தங்கமயிலை அவரது அம்மா பாக்கியம் கூட்டிச் சென்றார். அப்போது உங்களது குடும்பத்தை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்று சாபம் விட்டுச் சென்றார். அதன் பின்னர் ஒரு முடிவோடு இருந்த சரவணன் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பவே, அதைப் பார்த்து ஷாக்கான தங்கமயிலின் குடும்பத்தினர், போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர்.
Pandiyan Stores 2 Today Episode Gomathi Faints
அதில், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாகவும், வேலைக்கு போக சொல்லியும், அடித்தும் துன்புறுத்துவதாகவும் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் கோமதி, ராஜீ, அரசி, பாண்டியன், சரவணன், கதிர் மற்றும் செந்தில் என்று அனைவரும் விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் மீனா மட்டும் கிரேட் எஸ்கேப், அவரது பெயரை கொடுக்கவில்லை. சக்திவேல், முத்துவேல், அக்கம் பக்கத்தினர் பாண்டியன் ஃபேமிலி என்று பல பேரிடம் விசாரணை மேற்கொண்ட பிறகு ராஜீ மற்றும் அரசி இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
Pandiyan Family in Separate Jail Cells
தங்கமல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வாக்குமூலம் கொடுக்க சரவணன், கோமதி, பாண்டியன், கதிர், செந்தில் என்று அனைவரும் மீதும் முதல் தகவல் அறிக்கை என்று சொல்லப்படும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் ஜெயிலுக்கு கூட்டி செல்லப்பட்டனர். இதில் கோமதி ஒரு ஜெயிலிலும் பாண்டியன், சரவணன், கதிர், செந்தில் என்று அனைவரும் தனி ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.
Bakkiyam Plan Against Pandiyan Family
ஏற்கனவே கோமதிக்கு உடம்பு வேறு சரியில்லை. போலீஸ் ஸ்டேஷனில் சோர்வாகவே இருந்தார். இந்த நிலையில் தான் ஜெயிலில் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்த கோமதி தண்ணீர் குடிக்கும் போது நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழுந்து மயக்கமடைந்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் 680ஆவது எபிசோடு முடிந்தது. இனி இந்த வாரம் என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ககலாம்.