vignesh sivan going to marry nayanthara soon
விரைவில் நயன்தாராவுக்கு திருமணம்..! வாய் திறந்த விக்னேஷ் சிவன்..!
தானே சேர்ந்த கூட்டம் திரைப்படம் இன்று வெளியாகி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.
இந்த திரைப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில்,இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசை அமைப்பாளர் அணிருதிடம் தொகுப்பாளர் பல கேள்விகளை துருவி துருவி கேட்க தொடங்கினார்.
அப்போது, என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்தபடியே சமாளித்து வந்துள்ளார் விக்னேஷ் சிவன்....
ஏற்கனவே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பற்றி பரவலாக விமர்சனங்கள் இருக்கும் போது,எப்போது தான் அவர்களுடைய திருமணத்தை பற்றி உறுதி செய்வார்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில்,விக்னேஷ் சிவனை பார்த்து...உங்களுக்கு பிடித்த நடிகை யார்..? உங்களுக்கு எப்போது திருமணம்..? யாரையாவது காதல்செய்கிறீர்களா என்ற, தொகுப்பாளரின் கேள்விக்கு....விக்னேஷ் சிவன் சொன்ன ஒரே பதில்...."நயன்தாரா".
இதிலிருந்து நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணம் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
