Nayanthara New car :புது காருடன் பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்கு திடீர் விசிட் அடித்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா
நயன்தாரா நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடி தான் படத்தில் நடித்தபோது அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் (vignesh shivan) மீது காதல் வயப்பட்டார். இந்த காதல் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தற்போது வரை நீடித்து வருகிறது. விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.
இவர்கள் இருவரும் தற்போது ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் இவர்களது திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப காலமாக விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் (nayanthara) கோவில்களுக்கு ஜோடியாக சென்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அந்தவகையில், தற்போது இருவரும் ஜோடியாக சென்னையில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். புதிதாக இன்னோவா கார் ஒன்றை வாங்கியுள்ள அவர்கள், அதற்கு பூஜை போடுவதற்காக பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்கு ஜோடியாக சென்றுள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நயன்தாரா (nayanthara) நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாராவும், சமாந்தாவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. அதன்படி வருகிற ஏப்ரல் 28-ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்.... BiggBoss Ultimate : கமல் விலகியதற்கான காரணமே வேற... பகீர் கிளப்பிய வனிதா - அப்போ கமல் சொன்னதெல்லாம் பொய்யா?