Asianet News TamilAsianet News Tamil

புர்ஜ் கலிஃபா கோபுரம் முன்பு பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் தனது பிறந்தநாளை தனது மனைவி நயன்தாராவுடன் புர்ஜ் கலிபா முன் கொண்டாடினார்.

Vignesh Shivan celebrated his birthday in front of Burj Khalifa with his wife nayanthara
Author
First Published Sep 18, 2022, 7:36 AM IST

இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகங்களை திரை உலகில் பிரதிபலித்து வரும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் 37 ஆவது பிறந்தநாள் இன்று.  தனது பெற்றோர் காவல் துறையை சார்ந்தவர்களாக இருப்பினும் இவர் ஏனோ அந்த துறைக்கு செல்ல விரும்பவில்லை மாறாக நடிகராக வேண்டும் என்கிற ஆசைதான் சிவி படத்தில் தோன்றியுள்ளார். திரில்லர் கதைக்களத்தை கொண்ட அந்த படத்தில் நாயகனின் நண்பனாக சிறுவேடத்தில் நடித்துள்ளார் விக்னேஷ் சிவன்.  கே எஸ் செந்தில்நாதன் இயக்கிய சிவி படத்தின் மூலம் திரையுலகுக்குள் என்ட்ரி  கொடுத்த நடிகர் விக்னேஷ் சிவனுக்கு இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்தது.

அதன்படி சிம்பு நாயகனாக நடித்த போடா போடி என்னும் படத்தை இயக்கினார் விக்னேஷ்.  இந்த படத்தை 2008 ஆம் ஆண்டு விளம்பரப்படுத்தி உள்ளனர். சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ளார். ஆனால் படம் பல ஆண்டுகள் தள்ளிப்போனது. கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றிருந்தது. பெரும்பாலும் இதன் படப்பிடிப்புகள் வெளிநாட்டில் தான் நடந்துள்ளது. 

மேலும் செய்திகளுக்கு...உடலில் ஒட்டி இருக்கும் உள்ளாடை... கீழே கர்ச்சீப் போன்ற துணியை கட்டிக்கொண்டு செமி நியூடாக போஸ் கொடுத்த நடிகை..!

தொடர்ந்து படங்களிலும் இயக்காமல் இருந்த விக்னேஷ் சிவன் தனது பாடல் எழுதும் திறமையால் திரை உலகில் நீடித்து வந்தார். ஆல்பம் இசை வீடியோக்களை படமாக்கி வந்த இவர் தனுசுடன் இணைந்து வேலையில்லா பட்டதாரியில் பொறியாளராக ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்தார். அதன் மூலம் உருவான நட்பை கொண்டு நானும் ரவுடிதான் படம் படைக்கப்பட்டது. நாயகனாக நேரமில்லை என கூறிய தனுஷ் விக்கி இயக்கவுள்ள படத்தை தயாரிக்க முன் வந்தார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது.

பின்னர் சூர்யா கீர்த்தி சுரேஷ் நடித்த தானா சேர்ந்த கூட்டம் அதை அடுத்து பாவ கதைகள் என்னும் அந்தாலாஜி தொடரில்\ஒரு பகுதி இறுதியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என ஐந்து படங்களில் மட்டுமே இயக்குனராக பணிபுரிந்துள்ளார் விக்னேஷ் சிவன். ஆனால் இதில் நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்றது. 

மேலும் செய்திகள்: பிரபலங்களுடன் மிக எளிமையாக நடந்த மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

இதற்கிடையே நானும் ரவுடிதான் படத்தை இயக்கியிருந்தபோது படப்பிடிப்பு தளத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு மலர்ந்த காதல் கடந்த ஜூலையில் தான் திருமண பந்தமாக நிறைவேறியது. மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த மணவறையில் சூப்பர் ஸ்டார்களின் வாழ்த்துக்களோடு இவர்களது திருமணம் அரங்கேறியது. திருமணத்தை தொடர்ந்து அதிர்ஷ்டம் அடித்தார் போல இவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி நடந்து முடிந்த 41வது ஒலிம்பியாட் செஸ் போட்டியின் துவக்க விழாவை இயக்கிய விக்னேஷ் சிவன், அஜித்குமாரின் 62 ஆவது இரண்டாவது படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது அதிலும் அனிருத் தான் இசையமைப்பாளர். இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கலாம் என ஒரு தகவலும் உண்டு. இதற்கிடையே தனது காதலி நயன்தாராவுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்னும் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் விக்னேஷ் சிவன். அதன் மூலம் நெற்றிக்கண், கூலாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல், ராக்கி, ஊர்க்குருவி, கனெக்சன், வாக்கிங் டாக்கிங் ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீம் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளனர்.
இதில் கூழாங்கல் படம் பல விருதுகளை குவித்து வருகிறது.

 அதோடு பாடல் ஆசிரியராக வலம் வரும் விக்னேஷ் சிவன் போடா போடி, வணக்கம் சென்னை, என்னை அறிந்தால், மாரி, நானும் ரவுடிதான், ரெமோ, அச்சமென்பது மடமையடா, யாக்கை, விக்ரம் வேதா, தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா, இரும்புத்திரை, எல்கேஜி, நம்ம வீட்டு பிள்ளை, வலிமை, காத்து வாக்குல ரெண்டு காதல் என வெற்றிப் படங்கள் பலவற்றிற்கும் பாடல் வரிகள் இயற்றி கொடுத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு இவர் காணும் முதல் பிறந்தநாள் என்பதால் இந்த பிறந்தநாள் பெரிதாக பார்க்கப்படுகிறது. அதன்படி பிரபலங்களும் ரசிகர்களும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் நேற்றிரவு உலகின் உயரமான கட்டிடமாக புர்ஜ் கலிஃபா கோபுரம் முன்பு நயன்தாரா- விக்னேஷ் சிவன் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios