தல அஜித் பார்ப்பதற்கு மட்டும் அழகானவர் இல்லை,  பழகுவதற்கும்   இனிமையானவர். மேலும் அனைவருடனும் மிகவும் எளிமையாக பழகும் சுபாவம் கொண்டவர். இதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கும்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சீனியர்களை மதிப்பதோடு, ஜூனியர்களுக்கு தன்னால் முடிந்தவரை உதவும் உள்ளம் கொண்டவர். 

இந்நிலையில், அஜித் செய்த காரியத்தை பற்றி கூறி நெகிழ்ச்சியடைத்துள்ளார் நடிகை வித்யா பாலன்.

அதாவது "நேர்கொண்ட பார்வை' படத்தில் நடிகை வித்யா பாலன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது நாம் அறிந்தது தான். ஒரு நாள் வித்யா பாலன் தொடர்பான காட்சிகள் படமாகி கொண்டிருந்ததாம். அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் முன்கூட்டியே படமாக்கி முடிக்கப்பட்டு விட்டது.  

இருப்பினும் வித்யாபாலன் தொடர்பான காட்சிகள் முடியும் வரை காத்திருந்து, அவருக்கு நன்றி கூறி விட்டு வீட்டுக்குப் புறப்பட்டு சென்றாராம் தல.  இவர் செய்த இந்த காரியத்தை கூறி,  அஜித் மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பவர் என்று தெரியும் ஆனால் இவ்வளவு மரியாதை கொடுப்பவர் என்பதை இப்போது தான் புரிந்து கொண்டேன் என நெகிழ்ச்சியோடு கூறியுள்ளார் வித்யா பாலன்.