vidya balan acting ntr bio pic movie

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரும் இன்றளவும் பல நடிகர்களுக்கு முன்னோடியாகவும் திகழ்பவர் என்.டி.ராமராவ்.

தற்போது பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக என்.டி.ராமராவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கப்படுகிறது.

"என்.டி.ஆர் பயோபிக்" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா, தந்தையின் வேடத்தில் நடிக்கின்றார். இந்த படத்தில் என்.டி.ஆரின் மனைவி பசவதாரகம் வேடத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்கின்றார்.

வித்யாபாலன் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் என்பதால் ஏற்கனவே இருந்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் கூடியுள்ளது. 

கிருஷ் இயக்கும் இப்படத்தை நந்தமுரி பாலகிருஷ்ணா தயாரிக்க உடன் சாய் கோரப்பட்டி, விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கின்றனர்.

ஏற்கனவே பிரபல கவர்ச்சி நடிகை, சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படாதில் நடித்து தேசிய விருதை பெற்ற இவர் தற்போது மீண்டும் ஒரு வாழ்கை வரலாறு படத்தில் நடிப்பது இந்த படத்தின் மீதான சுவாரிஸ்யத்தை மேலும் அதிகரித்துள்ளது.