வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் நடிக்கும் பாலா பட ஹீரோ..! வெளியானது அதிகார பூர்வ அறிவிப்பு..!
இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படம் என்றாலே, கண்டிப்பாக வித்தியாசமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை அணைத்து சினிமா ரசிகர்களுக்கும் உண்டு. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான, 'அசுரன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

இதை தொடர்ந்து, இவர் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்கும் படம் குறித்த அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் நடிகர் பிரிதிவிராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற, "அய்யப்பனும் கோஷியும்' படத்தின் ரீமேக் குறித்த அறிவிப்பு தான் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதுகிறார் வெற்றிமாறன். ஆனால் தற்போது வரை இந்த படத்தின் இயக்குனர் யார் என்பதை படக்குழு அறிவிக்கவில்லை.
இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் பிலிம் கம்பெனியுடன் இணைந்து, தயாரிப்பாளர் கதிரேசனின் ஃபை ஸ்டார் கிரியேஷனும் தயாரிக்க உள்ளது. இந்த படத்தில், இயக்குனர் பாலா பட நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதுகுறித்து அதிகார பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.