வாடிவாசல் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வெற்றி மாறன்..வைரல் வீடியோ !

மிகப்பெரிய கேக்கில் வாடிவாசல் என எழுது அதனை இயக்குனர் கட் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

vetrimaaran birthday celebration with  vaadivasal cake

தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமான இயக்குனர் வெற்றிமாறன். முதல் படத்திலிருந்திலேயே பல பாராட்டுக்களை பெற்று முன்னணி இயக்குனரான.  மீண்டும் தனுஷுடன் ஆடுகளம், வடசென்னை என மாஸ் காட்டிய வெற்றிமாறன் அசுரன் மூலம் தேசிய விருது பெரும் இயக்குனர்களில் முன்னணி வரிசையில் இடம் பெற்று விட்டார். வித்யாசமான கதைக்களத்தையும் விறுவிறுப்பான காட்சிகளையும் அமைப்பதில் பெயர்போன வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான காக்கா முட்டை விசாரணை உள்ளிட்ட படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு...நீல நிற உடையில் இளம் நாயகிகளை தோற்கடிக்கும் சினேகா...புதிய புகைப்படம் இதோ

விரல் விட்டும் எண்ணும் அளவிற்கு சில படங்களை மட்டுமே இவர் இயக்கிய இருந்தாலும் இவர் படைப்புகளுக்கு என தனி பெயர் உண்டு. தற்போது சூரி நாயகனாக அறிமுகமாகவும் விடுதலை மற்றும் சூர்யாவின் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் பிஸியாக இருக்கிறார் வெற்றிமாறன். இதில் வாடிவாசல் படம் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் படப்பிடிப்புக்கு வரவில்லை. இதன் முன் பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. இதற்காக சூர்யா சிறப்பு பயிற்சி எடுத்த வருகிறார். வாடிவாசல் படத்தில் பயன்படுத்துவதற்கான காளையையும் நாயகன் வளர்த்து வரும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அவ்வப்போது வெளியாகி வைரல் ஆவது வழக்கம்.

மேலும் செய்திகளுக்கு...தேசிய விருது இயக்குனர் வெற்றி மாறனின் சிறந்த படைப்புகளின் பட்டியல் இதோ

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் தனது 47வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி விடுதலை படத்திலிருந்து இயக்குனர் வெற்றிமாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதேபோல வாடிவாசல் டீமும் இயக்குனர் வெற்றிமாறனின் பிறந்த நாளை கொண்டாடியுள்ளது. அதற்கான மிகப்பெரிய கேக்கில் வாடிவாசல் என எழுது அதனை இயக்குனர் கட் செய்யும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...ஒருபடம் ஹிட் ஆனதும் சம்பளத்தை டபுள் மடங்கு உயர்த்திய தனுஷ்... அதுவும் எத்தனை கோடி தெரியுமா?

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios