"முரட்டு தைரியம்.. பிரிவினை என்பது அவர் அகராதியில் இல்லை" - கேப்டனுக்கு புகழாரம் சூட்டிய மூத்த நடிகர் மோகன்!

Actor Mohan : தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் திரு. மோகன் அவர்கள் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இறந்த நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு தனது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

Veteran Tamil Cinema Actor Mohan Emotional video for Capitan Vijayakanth ans

தேமுதிக கட்சியின் தலைவரும், முன்னாள் நடிகர் சங்க தலைவருமான நடிகர் விஜயகாந்த் அவர்கள் நேற்று டிசம்பர் 28ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலைகள் காலமானார், அவருக்கு வயது 71. திரைத்துறை சார்ந்த பல பிரபலங்களும் தங்களுடைய இறுதி அஞ்சலியை நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு நேரில் சென்று செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. 

நேற்று இரவு நடிகர் விஜய் அவர்கள், இறந்த விஜயகாந்தின் பூத உடலை பார்த்து கண் கலங்கி நின்ற காட்சி காண்போரை நெஞ்சை உலுக்கும் வண்ணம் இருந்தது. இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு சென்னை வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், நேரடியாக விஜயகாந்த் உடலை பார்த்து மனம் உருகி தனது இறுதி அஞ்சலியை அவருக்கு செலுத்தினார்.

ஜெயலலிதா,கருணாநிதி இருந்தே போதே அப்படி செய்தவரு! இதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல!கேப்டன் குறித்து சீமான் புகழாரம்

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் அவர்கள், அரசியல்வாதிகள், ஊடக நண்பர்கள் என்று பலரை அவர் கோபமாக பேசியதுண்டு, ஆனால் பதிலுக்கு அவர் மீது யாரும் கோபப்பட்டது இல்லை. காரணம் அவருடைய கோபத்தில் ஒரு நியாயம் இருக்கும், எப்பொழுதும் சுயநலம் இருக்காது என்று தனது நண்பரின் இறப்புக்கு அவர் இரங்கல் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் சமகாலத்து நடிகரும், தமிழ் திரையுலகின் மூத்த கலைஞருமான மைக் மோகன் அவர்கள் தற்பொழுது ஒரு காணொளியை வெளியிட்டு இருக்கிறார். அதில் முரட்டுத்தனமான தைரியம் கொண்டவர் நடிகர் விஜயகாந்த் என்று கூறியுள்ளார். ஏழை, பணக்காரன் மற்றும் ஜாதி பிரிவினை என்று எதுவுமே அவர் அகராதியிலேயே கிடையாது என்றும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இன்று மாலை விஜயகாந்த் அவர்களுடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios