தமிழ் சினிமாவின் துவக்க காலங்களில் மிகச்சிறந்த நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வந்த எம் ஆர் சந்தானம் அவர்களின் மகன் தான் மறைந்த மூத்த நடிகர் ஆர் எஸ் சிவாஜி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

1981 ஆம் ஆண்டு தனது சகோதரர் சந்தான பாரதி இயக்கத்தில் வெளியான பன்னீர் புஷ்பங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தவர் ஆர்.எஸ் சிவாஜி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரை உலகில் சுமார் 43 ஆண்டு காலமாக பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் இணைந்து நடித்துள்ளார். 

குறிப்பாக 1989 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல்ஹாசன் முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் நடித்து வெளியான அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் "தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க" என்று அவர் ஜனகராஜை பார்த்து பேசும் வசனங்கள் இன்றளவும் பிரபலம். அன்று தொடங்கி இன்று வரை பல திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக நெல்சன் இயக்கத்தின் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில் இவருடைய நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.

மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி தேசிய விருது இயக்குனரின் சகோதரரா?

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் அவர் காலமான நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில் எனது நண்பரும் சிறந்த குணசித்திர நடிகர் வருமான ஆர் எஸ் சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். 

Scroll to load tweet…

சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்து நீடிக்கும் படியான உயிரோட்டத்தை அழிக்கக்கூடிய ஆற்றில் கொண்டவர் அவர். எங்களுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

Scroll to load tweet…

அதேபோல கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப் குமார் அவர்களும் அவருடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் திரைக்கதையில் ராகவா லாரன்ஸ்.. உறுதியான கூட்டணி.. ஹீரோயின் யார் தெரியுமா? மாஸ் அப்டேட்!