Actor Akshay Kumar : மூன்றாவது முறையாக பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் அக்ஷய் குமார் தனது "Sarfira" திரைப்பட பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தபொழுது, அவருக்கு ஏற்பட்ட சில உடல் பிரச்சனை காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கு நேர்மறையான சோதனை முடிவுகள் வெளிவந்துள்ளது. மேலும் அவரோடு இணைந்து பயணித்த, சில விளம்பர குழுவினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபல நடிகர் அக்ஷய் குமார் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகியுள்ளது. 

ஏற்கனவே சுதா கொங்கார இயக்கத்தில், பிரபல நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான "சூரரை போற்று" திரைப்படத்தை, மீண்டும் இயக்குனர் சுதா "Sarfira" என்கின்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார். இதில் பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்த நிலையில், இன்று நான் அந்த திரைப்படம் திரையரங்கில் வெளியானது. தொடர்ச்சியாக அவருடைய நடிப்பில் திரைப்படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Rashmika Mandanna : இதனால தான் அவங்க நேஷனல் கிரஷ்.. ராஷ்மிகா மந்தனாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்..

மேலும் நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த சில நாட்களாக தன்னுடன் மிக நெருக்கமாக வந்து சென்றவர்கள், உரிய பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். மீண்டும் அவர் நலம் பெற்று தனது திரைப்பட பணிகளை விரைவில் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போது மும்பை நகரில் நடந்து வரும் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானியின் திருமண நிகழ்வில் அக்ஷய் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல கடந்த 2022ம் ஆண்டு "கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவிற்கு" செல்ல ஆயத்தமான அக்ஷய்குமார், கொரோனா பாதிப்பு காரணமாக அந்த பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இன்று ஆனந்த அம்பானியின் திருமணம் மும்பையில் நடைபெற உள்ள நிலையில், நாளை ஜூலை 13ஆம் தேதி "ஆசிர்வாத்" என்கின்ற சுப நிகழ்வும் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஜூலை 14ஆம் தேதி நடைபெற உள்ளது. 

ஜான் சீனா முதல் பாலிவுட் நட்சத்திர பட்டாளம் வரை.. ஜொலிக்கும் ஆனந்த் அம்பானி கல்யாணம் - மிளிர்கிறது மும்பை!