- Home
- Gallery
- Anant - Radhika Wedding: உலகையே மிரள வைக்கும் ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம்; எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்!!
Anant - Radhika Wedding: உலகையே மிரள வைக்கும் ஆனந்த் அம்பானி ராதிகா திருமணம்; எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்!!
Anant Ambani : மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் இன்று பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடக்கவுள்ளது.

Anant Ambani
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தன்னுடைய மகன் ஆனந்த் அம்பானிக்காக, அந்த சொர்க்கத்தை, பூமிக்கே கொண்டு வந்திருக்கிறார் முகேஷ் அம்பானி என்று தான் கூற வேண்டும்.
Mukesh Ambani
கடந்த ஆண்டு பிரபல தொழிலதிபர் விரென் மெர்ச்சண்ட் அவர்களின் இளைய மகள் ராதிகா மெர்ச்சன்டுக்கும், இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
Anand Ambani wedding photos
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, இந்த ஜோடியின் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டங்கள் இந்தியாவில் வெகுஜோராக கொண்டாடப்பட்டது. பல முக்கிய அரசியல் மற்றும் சினிமாத்துறை பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
Anand Ambani wedding
இதனைத் தொடர்ந்து இத்தாலி நாட்டு கடற்கரையில், சொகுசு கப்பலில் மூன்று நாள் பயணமாக விமர்சையாக ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இதில் தோனி உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Radhika Merchant
இந்த சூழலில் இன்று ஜூலை மாதம் 12ம் தேதி, மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில், அனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்டின் திருமணம் இன்னும் சில மணி நேரத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Anant and Nita Ambani
ஏற்கனவே வெளிநாடுகளை சேர்ந்த பல முக்கிய பாடகர்கள் நேரில் வந்து அனந்த அம்பானியின் திருமண நிகழ்வுகளில் கலந்து கொண்ட நிலையில், தற்பொழுது பிரபல WWE வீரர் ஜான் சீனா இந்த திருமணத்தில் பங்கேற்க வந்துள்ளார்.
Mukesh and Nita Ambani
மும்பை நகரமே விழாக்கோலம் கொண்டுள்ள சூழலில், பாலிவுட் உலகை சேர்ந்த பல முக்கிய நடிகர்கள், நடிகைகள் தொடர்ச்சியாக திருமணம் நடைபெற உள்ள இடத்திற்கு நேரில் வந்து கொண்டிருக்கின்றனர்.
Anand Ambani wedding in Mumbai
ஆனந்தின் திருமணத்திற்கு முன்னதாக, பல ஏழை எளிய ஜோடிகளுக்கு அம்பானி குடும்பத்தினர் திருமணம் செய்துவைத்து குறிப்பிடத்தக்கது.