பிரபுவின் மகளுக்கு நடந்த இரண்டாவது திருமணம்.. முதல் கணவரை பிரிய காரணம் என்ன? அவர் யார்? பயில்வான் தந்த தகவல்!

Prabhu Daughter First Marriage : தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான பிரபு அவர்களுடைய மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நேற்று டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

Veteran Actress Prabhu Daughter Second marriage with director aadhik who is her first husband ans

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணிபுரிந்து, தனக்கான சரியான வாய்ப்பு கிடைக்காமல் இறுதிவரை இயக்குனராக முடியாமல் இருந்த ரவிச்சந்திரன் என்கின்ற உதவி இயக்குனரின் மகன் தான் ஆதிக் ரவிச்சந்திரன். கடந்த 2015 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான "திரிஷா இல்லனா நயன்தாரா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இவர் இயக்குனராக களம் இறங்கினார். 

அதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சிம்புவின் "அன்பானவன் அசராதவன் அடங்காதவன்" என்கின்ற திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனை எடுத்து சுமார் 6 ஆண்டுகள் கழித்து இந்த 2023 ஆம் ஆண்டு துவக்கத்தில் ரவிச்சந்திரன் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் வெளியான பகீரா திரைப்படமும் பெரிய அளவில் செல்லாத நிலையில், எஸ்.ஜே சூர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்து வெளியான "மார்க் ஆண்டனி" திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய ஹிட் ஆனது.

ரெடினை கரம் பிடித்த நடிகை சங்கீதா.. 45 வயதில் நடந்த இரண்டாவது திருமணம் - அவர் முதல் கணவர் யாரென்று தெரியுமா? 

இதனால் தற்பொழுது தனது கனவு நாயகனான அஜித்குமாரை இயக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் ரவிச்சந்திரன் என்று கூறினால் அது மிகையல்ல. இந்நிலையில் இவர் பிரபல தமிழ் சினிமா நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் நேற்று டிசம்பர் 15ஆம் தேதி திருமணம் நடந்தது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும் இவர்களுடைய திருமணத்திற்கு நேரில் வந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். 

இந்நிலையில் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா தனது முதல் கணவரை விவாகரத்து செய்ய என்ன காரணம்? என்பது குறித்து தற்பொழுது பேசியுள்ளார் பிரபல நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன். "பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை, அவருடைய சகோதரி தேன்மொழியின் மகனுக்குத் தான் திருமணம் செய்து வைத்தார்கள். அவருடைய பெயர் குணால், இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவருடைய சொத்துக்களை பிரிக்கும் பொழுது ஏற்பட்ட சிறிய தகராறு காரணமாக நடிகர் பிரபு மற்றும் அவரது சகோதரி தேன்மொழி ஆகியோருக்கு இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது".

Veteran Actress Prabhu Daughter Second marriage with director aadhik who is her first husband ans 

KPY Bala: விரல் உடைந்த நிலையில் கையில் கட்டோடு விஜய் டிவி KPY பாலா..! என்ன ஆச்சு? பதறிய ரசிகர்கள்.!

"இதனை அடுத்து அண்ணன் பிரபு மீது சகோதரி தேன்மொழியும் வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இந்த மனக்கசப்பு ஐஸ்வர்யா குடும்பத்திலும் தொற்றிக்கொள்ள அவர் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். மேலும் தற்பொழுது வெளிநாட்டில் வசித்து வரும் குணால் அவர்களும் தன் மாமா மீது உள்ள கோபத்தின் காரணமாக சட்டபூர்வமாக தனது மனைவி ஐஸ்வர்யாவிற்கு விவாகரத்து அளித்துள்ளார். இந்த சூழ்நிலையில் தான் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் திருமணம் நடைபெற்றது" என்று அவர் கூறியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios