MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • KPY Bala: விரல் உடைந்த நிலையில் கையில் கட்டோடு விஜய் டிவி KPY பாலா..! என்ன ஆச்சு? பதறிய ரசிகர்கள்.!

KPY Bala: விரல் உடைந்த நிலையில் கையில் கட்டோடு விஜய் டிவி KPY பாலா..! என்ன ஆச்சு? பதறிய ரசிகர்கள்.!

விஜய் டிவி KPY நிகழ்ச்சி மூலம் பிரபலமான, பாலா மக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில்... விரல் உடைந்து கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
Published : Dec 16 2023, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
kpy bala

kpy bala

விஜய் டிவியில் ஒளிபரப்பான KPY  நிகழ்ச்சி மூலம் பிரபலமான பாலாவின் விரல் உடைந்த நிலையில், கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, உருக்கமாக போட்டுள்ள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
 

27

புதுவை மாநிலம் காரைக்காலில் பிறந்த பாலா, தன்னுடைய காமெடி திறமையை விஜய் டிவியில் ஒளிபரப்பான KPY நிகழ்ச்சில் வெளிப்படுத்தினார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'கலக்கப்போவது யாரு' சீசன் 6 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற இவர், இதைத் தொடர்ந்து விஜய் டிவி புராபர்ட்டியாக மாறி... பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றாலும் இவருக்கு திரையுலக வாய்ப்பை பெற்று கொடுத்தது, குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

Bigg Boss Eviction: ஜஸ்ட் மிஸ்.. தப்பிய நிக்சன்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?

37
KPY Bala

KPY Bala

இவருடைய டைமிங் காமெடி மற்றும் ஒருவருக்கு பார்த்ததுமே பெயர் வைப்பது போன்ற திறமைகள் பாலாவை தனித்துவமாக காட்டியது. 2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஜூங்கா படத்திலும் அறிமுகமான பாலாவுக்கு ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
 

47
KPY Bala

KPY Bala

ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர்... இவரின் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ளது. 2023 ஆம் ஆண்டு மட்டும், பிகினிங், கோஷ்டி, ரன் பேபி ரன், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும், தில்லு இருந்தா போராடு, ரா ரா சரசுக்கு ரா ரா, என்ற பல படங்களில் வெளியானது.

Bigg Boss Eviction: ஜஸ்ட் மிஸ்.. தப்பிய நிக்சன்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் தெரியுமா?
 

57
KPY Bala

KPY Bala

 பாலா ஒரு பக்கம் நடிப்பில் பிசியாக இருந்தாலும், தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை மக்களுக்கு உதவும் நோக்கில் செலவிட்டு வருகிறார். இதுவரை மலை கிராமத்தில் வாழும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தது, முதியோர் இல்லம், ஆதரவற்றோர்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளது என நான்கு ஆம்புலன்ஸ்களை வாங்கிக் கொடுத்துள்ளார். அதே போல் தன்னிடம் உதவி என கேட்பவர்களுக்கு முடிந்த உதவியை தொடர்ந்து செய்து வருகிறார்.
 

67

மேலும் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை 3 லட்சத்திற்கும் மேல் பணம் உதவி செய்துள்ளது மட்டும் இன்றி, மக்களுக்கு தேவையான அடைப்படை தேவைகளை தொடர்ந்து செய்து வருகிறார். இவர் பிரதிபலன் பாராமல் செய்யும் உதவிக்காகவே இவருக்கு பல ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.

Celebrity Couple Divorce: திருமணமான ஐந்தே வருடத்தில்... பிரபல இயக்குனரை விவாகரத்து செய்த விஜய் பட பிரபலம்!
 

77

இந்நிலையில் பாலா தன்னுடைய கைவிரல்கள் உடைந்து விட்டதாக instagram பக்கத்தில் போட்டுள்ள பதிவு, இவருடைய ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பலர் என்ன ஆச்சு என தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். பாலா விரலில் கட்டுடன் போட்டுள்ள பதிவில் 'மனம் நிறைந்தது...  விடல் உடைந்தது! நன்றி என கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கையில், மக்களுக்கு உதவி செய்யும் போது எதிர்பாராத விதமாக இவருடைய விரல் உடைத்திருக்கலாம் என தெரிகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
குக் வித் கோமாளி
விஜய் தொலைக்காட்சி
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved