நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
கெளதம் மேனனின் கதை என்றால் இப்படித்தான் இருக்கும் என்கிற ஒரு எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கும், அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் விதமாகவே 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ஒவ்வொரு காட்சியும் அமைந்துள்ளது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவன், எப்படி கேங் ஸ்டார் ஆகிறான் என்பதையே இந்த படத்தில் பல ட்விஸ்ட்டோடு கெளதம் மேனன் சொல்லி இருக்கிறார் என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.

6 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் சிம்புவை வைத்து, படம் இயக்கி... தரமான சம்பவம் செய்ய காத்திருக்கிறார் கௌதம் மேனன். தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரிலேயே சிம்பு இந்த படத்தில் எப்படி பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் என்பதை பார்க்க முடிகிறது. மேலும் ட்ரைலர் முழுக்க, தன்னுடைய குரல் மூலம் விவரித்துள்ளார் கெளதம் மேனன். இது ஒரு புது முயற்சியாக பார்க்கப்பட்டாலும், இதுவும் ஒரு வழக்கமான கேங் ஸ்டார் கதை போன்று இருக்குமா? அல்லது முற்றிலும் வித்தியாசமான கதையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகள்: 'வெந்து தணிந்தது காடு' ஆடியோ லாஞ்சில் ஸ்ரேயா கோஷலுடன்... ரொமான்டி பாடல் பாடி அசத்திய ஏ.ஆர்.ரகுமான்! வீடியோ

சிம்பு கஷ்டப்படும் காலங்களில் இருந்து... கேங் ஸ்டார் கும்பலில் மாட்டிக்கொண்டு அடி வாங்குவது, சண்டை போடுவது என அனைத்து காட்சியிலும் தூள் கிளப்பியுள்ளார். கொஞ்சம் ரணகளமான கதைக்களமாக இருந்தாலும், காதல், அம்மாவின் செண்டிமெண்ட், சிம்புவின் அப்பாவிதமான காமெடி போன்றவை இந்த ட்ரைலரில் பார்க்க முடிகிறது. தற்போது வெளியாகியுள்ள ட்ரைலரே படத்தின் மீதான எதிரிபார்ப்பையும் அதிகரிக்க செய்துள்ளது.
மேலும் செய்திகள்: அஜித்துடன் பைக் ட்ரிப்பில் இணைந்த பிரபல நடிகை..! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்..!

'வெந்து தணிந்தது காடு' படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று மிக பிரமாண்டமாக வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரத்தேயாக செட் அமைக்கப்பட்டு நடந்து வருகிறது. இதில் உலக நாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள ட்ரைலரை வெளியிட்டுள்ளார். சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
