பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு சிலர் மட்டுமே சண்டை போட மற்றவர்கள் எல்லாம் மெளனமாக இருக்க என கடந்த காலம் முடிவுக்கு வந்துவிட்டது. நேற்றைய நிகழ்ச்சியில் கூட மாஸ்க் மூலம் டாஸ்க் கொடுத்த கமலிடமே ரியோ எகிற ஆரம்பித்தார். எனக்கு மாஸ்க் கொடுத்தது நியாயமே இல்லை என  ஆதியும் கொந்தளித்தார். இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சுரேஷ் சக்கரவர்த்தியை தவிர மற்றவர்களின் குரலும் கணீர் என கேட்க ஆரம்பித்துள்ளது. 

இதுபோதாது என்று அவ்வப்போது டாஸ்க் என்ற பெயரில் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே பல பூகம்பங்கள் வெடித்து வருகிறது. சற்று நேரத்திற்கு முன்பு வெளியாகியுள்ள பிக்பாஸ் புரோமோ வீடியோவிலும் அப்படி ஒரு சண்டை தான் ஆரம்பமாகியுள்ளது. Truth or Dare டாஸ்கில் தான் இது நடந்து இருக்கிறது. 

 

இதையும் படிங்க: அட அமலா பாலா இது?... நடுக்காட்டில் நடத்திய மிரள வைக்கும் போட்டோ ஷூட்...!

அப்படி அறந்தாங்கி நிஷாவின் முறை வந்த போது, அவரிடம் பாலாஜி யாரவது இருவரை தேர்ந்தெடுத்து “நோ கமெண்ட்ஸ் சிம்ப்ளி வேஸ்ட்” பட்டம் கொடுங்க என கூறினார். அதற்கு சொல்ல நிஷா சற்று தயங்கிய நிலையில், 'உங்களுக்கு பயமா இருக்கிறதா சொல்வதற்கு?' என கேட்கிறார் பாலாஜி முருகதாஸ். அதன் பின் தான் வேல்முருகனின் பெயரை நிஷா சொல்ல, அதனால் கோபமான வேல்முருகன் 'சும்மா அமைதியாக இருந்தால் கெட்டவனா?. இது நியாயமே இல்லை. யார் இந்த வம்பு வளர்த்தது. எதுவுமே இல்லாமல் எப்படி என்னை சொல்ல முடியும் என சண்டை போட்டார். அப்போது அர்ச்சனா “வேலு ஒரு 10 நிமிஷம் சும்மா இரு ப்ளீஸ்” என சத்தம் போட்டு அவரை அமைதிபடுத்துகிறார். 

 

இதையும் படிங்க:  குடிபோதையில் வம்பிழுத்த பீட்டர் பால்... அடித்து துரத்தி விட்ட வனிதா... நடந்தது இதுவா?

இதை ரசித்து பாலாஜி முருகதாஸ் சிரித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து வரும் ரம்யா பாண்டியனிடம் ஒருத்தரை நாமினேட் பண்ணணும் என சொல்ல அவரும் வேல்முருகன் பெயரை சொல்கிறார். இதனால் அவர் மிகவும் சோகமானது போல் காட்டப்படுகிறது. நிச்சயம் இன்னைக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் மிகப்பெரிய சம்பவம் இருக்கும் போல் தெரிகிறது. வீடியோ இதோ...