சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரமின் அறிமுக படமான ஆதித்ய வர்மா படத்தை தயாரித்த E4 எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சந்தனக் கடத்தல் வீரப்பன் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வெப் சீரிஸை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: ராஜமாதா கெட்டப்பில் வனிதா... தீயாய் பரவும் போட்டோவை பார்த்து கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதிய Chasing the Brigand என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளனர். இந்த வெப் சீரிஸில் இடம் பெறும் சம்பவங்கள் அனைத்தும் முன்னாள் ஏஜிடிபி விஜயகுமார் எழுதியுள்ள புத்தகத்தில் இருக்கும் சம்பவங்களை பிரதிபலிக்கும் விதத்தில் இருக்கும். 

இதையும் படிங்க: நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையிலான வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

இந்த வெப் சீரிஸில் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து லாக்டவுனுக்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா தெரிவித்துள்ளார். மேலும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் காப்புரிமையின் கீழ் வருவதாகவும், அதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முகேஷ் மேத்தா எச்சரிக்கை விடுத்துள்ளார்.