முதலில் துருவ் விக்ரம், பாலா இயக்கத்தில் வர்மா என்றொரு படத்தில் நடித்து வந்தார். படமும் முழுவதுமாக முடிக்கப்பட்டு ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் அது ட்ராப்  ஆனது. வேறு ஒரு இயக்குநரை வைத்து ஆதித்ய வர்மா படத்தை எடுத்து வெளியிட்டனர் என்பது அனைவரும் அறிந்தது தான். 

படம் வெற்றியோ தோல்வியோ? தேர்ந்த நடிகர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாகவே இயக்குநர் பாலாவின் எல்லா படைப்புகளும் இருந்து இருக்கின்றன. விக்ரம் துவங்கி ஜிவி பிரகாஷ் வரைக்கும் அனைத்து நடிகர்களுக்கும் இது பொருந்தும். இன்று துருவ் நல்ல நடிகராக உருவாகி இருப்பதற்கு அவர் பாலாவின் பயிற்சிப்பட்டறையில் தயாரானதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

துருவின் வெற்றிக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் இயக்குநர் பாலாவின் உழைப்பு இருக்கும் என்பதே பலரது கருத்து.

ஆதித்யா வர்மாவின் தயாரிப்பு செலவு 8 கோடி. வசூலானது 9.55 கோடி ரூபாய். இன்னும் பெரிய வசூலை வாரிக் குவிக்கும் என எதிர்பார்த்த ஆதித்ய வர்மாவின் படு மோசமான வசூல் துருவ் விக்ரமை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. விட்டுப்போன படிப்பை முடித்து விட்டு வருகிறேன் என்று லண்டனுக்கு கிளம்பி விட்டார்.

இதற்கிடையில் தனக்கு வர வேண்டிய பாக்கிக்காக ஒரு விபரீத முடிவை எடுத்திருக்கிறார் ஆதித்ய வர்மா, மற்றும் பாலாவின் வர்மா பட தயாரிப்பாளர். அதன்படி வர்மா படத்தையும் வெளியிடப் போகிறாராம். அது தியேட்டர்களில் அல்ல. அமேசான் டிஜிட்டல் தளத்தில். இதற்காக பெரும் தொகை ஒன்றை அமேசான் நிறுவனம் கொடுக்க முன் வந்திருக்கிறதாம். சேனல். கிட்டதட்ட பத்து கோடி நஷ்டத்தை முக்கால்வாசியாவது திருப்பிக் கொடுக்கும் என்று நம்புகிறார் இவர்.

பாலாவின் வர்மா படத்தை எடுக்க ஆன செலவும் ரூ.8 கோடி. ஆக 6.55 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட இந்த முடிவை எடுத்துள்ளது என ஒரு தகவல் வெளியான நிலையில், தற்போது இதுகுறித்த உண்மை தகவலை வெளியிட்டுள்ளார், தயாரிப்பாளர் முகேஷ் ரட்டிலால் மேத்தா. அதாவது இப்படி வெளியான தகவலில் துளியும் உண்மை இல்லை என கூறி இந்த தகவலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.