பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் பிரச்சனைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அதே போல், சைலெண்டா உள்ளே வந்திருக்கும் சாக்ஷி என்கிற வெடிகுண்டு எப்போது, கவினிடம் வெடிக்கும் என்பது தெரியவில்லை.

இது போன்ற சில பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டில் இருந்தாலும், காட்டு கத்து கத்தி, பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களை மட்டும் இன்றி, மக்களையும் கடுப்பேற்றி வருபவர் வனிதா. இவரின் பிரச்சனையே, அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு, அதற்கு தீர்வு சொல்கிறேன் என்கிற பெயரில் அந்த பிரச்னையை பெரிதாக்கி விடுவது தான். இதனால் மீண்டும் இவர் எப்போது வெளியே போவார் என பீல் பண்ண ஆரம்பித்து விட்டனர் மக்கள்.

இந்நிலையில், வனிதா தனக்கு சப்போர்ட்டாக உள்ள ஷெரின் பற்றியே மிகவும் கேவலமாக பேசி, சண்டை வாங்கும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது. 

ஷெரினும், தர்ஷனும் சாதாரண நட்புடன் பழகி வருகிறார்கள் என்பது, இந்த நிகழ்ச்சியை பார்க்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால் இது பிக்பாஸ் வீட்டில் உள்ள, வனிதாவுக்கு தெரியாமல் போய் விட்டது. இவர்கள் இருவருக்குள்ளும் அப்பேர் இருக்கிறது என கூறுகிறார். வனிதா இதை கூறியதும் மிகவும் கோவமான ஷெரின் எங்கள், ரிலேஷன்ஷிப் குறித்து நீ யார்? என்று வெளுத்து வாங்கும் ஷெரின், எனக்கும் தர்ஷனுக்கும் லவ் இருக்கின்றது நீ எப்படி சொல்லலாம்? என எகிறுகிறார். 

பின் தர்ஷனும் ஷெரினுடன் சேர்ந்து வனிதாவை வெளுத்து வாங்கிய தரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.