vaiyapuri complaint to bigg boss

நேற்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு பாரம்பரிய முறை படி உலக்கையில் நெல் குத்தி, அதனை அரிசியாக எடுத்து பேக் செய்யும்படி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின் நடுவராக இளம் நடிகர் ஹரீஷ் கல்யானை நியமித்தது பிக் பாஸ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இரு அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் தங்களுடைய டாஸ்கை மேற்கொண்டனர். அப்போது மிகவும் கோபமான வையாபுரி. எங்களை தயவு செய்து அனுப்பிவிடுங்கள், என்னால் முடியவில்லை என கேமராவிடம் வந்து முறையிட்டார்.

மேலும் கேமராவை பார்த்து என்னை ஆம்புலன்ஸில் கூட அனுப்பி விடுங்கள் என கூறியது பார்ப்பவர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. பின் இரு அணியின் அரிசியின் தரத்தை பார்த்து சினேகன் அணி வென்றதாக அறிவித்தார் ஹரீஷ் கல்யாண்.