MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • Karthigai Deepam : கார்த்திக்கின் பிளான் தெரியாமல் சவால்விட்ட சாமுண்டீஸ்வரி... ரேவதி ரிட்டர்ன் ஆனது ஏன்?

Karthigai Deepam : கார்த்திக்கின் பிளான் தெரியாமல் சவால்விட்ட சாமுண்டீஸ்வரி... ரேவதி ரிட்டர்ன் ஆனது ஏன்?

Karthigai Deepam Serial 10 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதி வெளிநாடு செல்ல பிளைட்டில் ஏறிய நிலையில், அதிர்ச்சி ட்விஸ்ட் அரங்கேறி உள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 10 2026, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Karthigai Deepam Serial Today Episode
Image Credit : Youtube

Karthigai Deepam Serial Today Episode

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் ‘கார்த்திகை தீபம்’. கடந்த எபிசோடு பரபரப்பான கட்டத்தில் முடிவடைந்த நிலையில், இன்றைய எபிசோடில் அடுத்தடுத்து எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. ரேவதி வெளிநாடு செல்வதில் பிடிவாதமாக இருக்கும் நிலையில், எப்படியாவது அவரை சந்தித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கார்த்திக் அவசரமாக ஏர்போர்ட்டுக்கு செல்கிறான். ஆனால் கார்த்திக் அங்கு செல்வதற்குள் ரேவதி ஏற்கனவே போர்டிங் முடித்து விமானத்தில் ஏறிவிடுகிறாள். இதனால் கார்த்திக்கின் முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டதாக நினைத்து சந்திரகலாவும் சாமுண்டீஸ்வரியும் சந்தோஷப்படுகின்றனர்.

Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சுவிட்ச் ஆஃப் பண்ணும் ரேவதி
Image Credit : Youtube

சுவிட்ச் ஆஃப் பண்ணும் ரேவதி

இதற்கிடையில் ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்த கார்த்திக்கை பார்க்கும் சாமுண்டீஸ்வரி, ரேவதி இனி இந்தியாவுக்கே திரும்ப முடியாது என்று சவால் விடுகிறாள். கார்த்திக் வெளிப்படையாக பதற்றத்தில் இருப்பது போல் தெரிந்தாலும், அவனது மனதில் வேறு ஒரு திட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. விமானத்திற்குள் சென்றுவிட்ட ரேவதி, கார்த்திக்குடன் கடைசியாக ஒருமுறை பேச முயற்சி செய்கிறாள். ஆனால் விமானம் புறப்படுவதற்கான நேரம் நெருங்கியதால், செல்போனை அணைக்கும்படி விமானப் பணியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். இதனால் இருவருக்கும் இடையிலான தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

Karthigai Deepam : கார்த்திக் - ரேவதியை பிரிக்க சாமுண்டீஸ்வரி போடும் மாஸ்டர் பிளான்... சக்சஸ் ஆகுமா?

Related Articles

Related image1
Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
Related image2
Karthigai Deepam : கார்த்திக் - ரேவதியை பிரிக்க சாமுண்டீஸ்வரி போடும் மாஸ்டர் பிளான்... சக்சஸ் ஆகுமா?
34
கார்த்திக்கின் அதிரடி பிளான்!
Image Credit : Youtube

கார்த்திக்கின் அதிரடி பிளான்!

இதற்கிடையே கார்த்திக், மயில்வாகனத்திடம் முக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லி உடனடியாக செயல்படும்படி அறிவுறுத்துகிறான். கார்த்திக் சொன்ன தகவலை கேட்டதும் மயில்வாகனம் வேகமாக புறப்படுகிறான். அவன் சிவனாண்டியின் வீட்டிற்குச் சென்ற பிறகு, யாருக்கும் தெரியாமல் ஒரு அதிரடி காரியத்தைச் செய்கிறான். முத்துவேலின் போனை பயன்படுத்தி ஏர்போர்ட் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ரேவதி பயணிக்கும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கிறான். தகவல் கிடைத்ததும் விமான நிலைய அதிகாரிகள் உஷாராகின்றனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ஏற்கனவே புறப்பட்ட விமானத்தை அவசரமாக மீண்டும் தரையிறக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

Karthigai Deepam : ரேவதியின் கனடா பயணத்திற்கு பின்னால் அதிர்ச்சி சதி... காப்பாற்ற ஓடும் கார்த்திக்!

44
சந்திக்கும் கார்த்திக் - ரேவதி
Image Credit : Youtube

சந்திக்கும் கார்த்திக் - ரேவதி

இதனால் எதிர்பாராதவிதமாக ரேவதியும் விமானத்தில் இருந்து மீண்டும் வெளியே வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ரேவதி வெளியே வருவதை பார்த்த கார்த்திக் நிம்மதி அடைகிறான். நீண்ட பதற்றத்திற்குப் பிறகு இருவரும் சந்தித்துக்கொள்ளும் காட்சிகள் உணர்ச்சிகரமாக அமைய உள்ளன. ரேவதியை இந்தியாவை விட்டு செல்ல விடாமல் தடுக்க கார்த்திக் போட்ட இந்த மாஸ்டர் பிளான் வெற்றி பெற்றுவிட்டதா? சாமுண்டீஸ்வரியின் சவாலுக்கு கார்த்திக் கொடுத்த பதிலடி என்ன? இனி ரேவதியின் முடிவு என்னவாக இருக்கும்?

அதிரடி திருப்பங்கள், பரபரப்பான காட்சிகள் மற்றும் கார்த்திக்–ரேவதி சந்திப்பு என இன்றைய ‘கார்த்திகை தீபம்’ எபிசோடு விறுவிறுப்பாக நகர உள்ளது. இன்று இரவு 9 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் எபிசோடை காணத் தவறாதீர்கள்!

Karthigai Deepam : சந்திரகலாவின் மாஸ்டர் பிளான்... கார்த்திக் - ரேவதியை கையும் களவுமாக பிடித்த சாமுண்டீஸ்வரி!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கார்த்திகை தீபம் (தொலைக்காட்சித் தொடர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
Recommended image2
Siragadikka Aasai : முத்து சொன்ன அடுக்கடுக்கான பொய்கள்... பாட்டியிடம் சிக்கி படாதபாடுபடும் விஜயா..!
Recommended image3
Karthigai Deepam : கார்த்திக் - ரேவதியை பிரிக்க சாமுண்டீஸ்வரி போடும் மாஸ்டர் பிளான்... சக்சஸ் ஆகுமா?
Related Stories
Recommended image1
Karthigai Deepam : ரேவதியின் பாஸ்போர்ட் மாயம்... கார்த்திக்கை வீழ்த்த எதிரிகள் போட்ட மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா?
Recommended image2
Karthigai Deepam : கார்த்திக் - ரேவதியை பிரிக்க சாமுண்டீஸ்வரி போடும் மாஸ்டர் பிளான்... சக்சஸ் ஆகுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved