”வரலாற்றின் இரத்தமே” ”பொன்னி நதி” பாடலுக்கு போட்டியாக வைரமுத்து எழுதி காவேரி கவிதை..? வைரலாகும் வீடியோ

பொன்னி நதி என்றழைக்கப்படும் காவேரி ஆறு குறித்து கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள கவிதை தற்போது வைரலாகியுள்ளது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் பொன்னி நதி பாடலுக்கு போட்டியாக தற்போது வைரமுத்துவின் இந்த கவிதை வீடியோ அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.
 

Vairamuthu write new poem about Cauvery river against of Ponniyin Selvan song

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் படத்தின் ”பொன்னி நதி” பாடல் வெளியானது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் இளங்கோ கிருஷ்ணன் என்பவரின் எழுத்தில் வெளியான ’பொன்னி நதி’  பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த பாடலானது, காவரி ஆற்றின் பெருமையையும் சோழ தேசத்தின் வளத்தையும் பறைசாற்றும் வகையில் உள்ளது. 

தமிழ் சினிமாவில் மணிரத்னம் - ஏஆர் ரகுமான் - வைரமுத்து கூட்டணியில் பல ஹிட் பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த மூவரும் கூட்டணியில் வெளியாகும் படத்தினை பார்ப்பதற்கு பெரிய கூட்டமே உண்டு. ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்த அவர், திடீரென நீக்கப்பட்டார்.இதுக்குறித்து இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ரசிகர்கள் மத்தியில் இது பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது.

மேலும் படிக்க:திருமணத்தால் சிக்கலை சந்திக்கும் நயன்தாரா...அட..இப்படி ஒரு கண்டிஷனா?

இந்நிலையில் தற்போது ”பொன்னி நதி” பாடலுக்குப் போட்டியாக கவிப்பேரரசு வைரமுத்து காவிரி ஆறு குறித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து பெய்து கனமழை காரணமாக காவேரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அழகை நேரில் சென்று ரசித்து, அதனை தனது நடையில் கவிதையாக சொல்லி வருணித்துள்ளார். 

அதில் ”உனது (காவேரி) கைகளை துண்டிக்க விட மாட்டோம், காவேரியில் அணை கட்ட விட மாட்டோம் ” என்றும் ”நீ அரசியல் ஆசீர்வாதம் இல்லை.,எங்களின் அதிகாரம்” எனும் வாக்கியங்கள் மேகதாட்டு அணை பிரச்சனையை எடுத்துக்கூறும் விதமாக அமைந்துள்ளது. 

மேலும் படிக்க:சரிவை சந்திக்கும் கோப்ரா...சீயானின் 3 வது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios