Vairamuthu is paying a tirbute to K.Balachander

மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு சிலை வைத்து நன்றிக் கடன் செலுத்துகிறார் வைரமுத்து. அதனை திறந்தி வைத்து சிறப்பு செய்கிறார் கமல்ஹாசன்.

பாடலாசிரியர் வைரமுத்து, இளையராஜாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு பாடல் எழுத வாய்ப்பில்லாமல் தவித்தபோது, கே.பாலச்சந்தர் தன்னுடைய படங்களில் பாடல்கள் எழுத வாய்ப்பளித்தார்.

பிறகு, தங்களுடைய தயாரிப்பில் உருவான ‘ரோஜா’ படத்தில், ஏ.ஆர்.ரஹ்மானிடம் சொல்லி எல்லாப் பாடல்களையும் வைரமுத்துவையே எழுத வைத்தார் பாலச்சந்தர்.

அதற்கு நன்றிக் கடனாக, கே.பாலச்சந்தரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் கிராமத்தில், கே.பாலச்சந்தரின் வெண்கலச் சிலையை வைரமுத்து திறந்து வைக்கிறார்.

ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவில், கமல் பங்கேற்று சிலையைத் திறந்து வைக்கிறார்.