Asianet News TamilAsianet News Tamil

சமந்தாவின் 'The Family Man 2' வெப் தொடருக்கு தடை விதிக்குமாறு மத்திய அமைச்சருக்கு வைகோ வலியுறுத்தல்!

 இந்த தொடரை ரத்து செய்யவேண்டும் என ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது வைகோ தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Vaiko urges Union Minister to ban Samantha The Family Man 2 web series
Author
Chennai, First Published May 23, 2021, 5:36 PM IST

நடிகை சமந்தா நடித்துள்ள 'தி பேமிலி மேன் 2' வெப் சீரிஸ் ஜூன் 4 ஆம் தேதி முதல் அமேசான் பிரேம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இந்த வெப் தொடரின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பல்வேறு அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த ட்ரைலரில் இடம் பெற்றுள்ள காட்சிகள் தமிழர்களை கொச்சை படுத்தும் விதமாக உள்ளதாகவும், இந்த தொடரை ரத்து செய்யவேண்டும் என ஏற்கனவே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்ட நிலையில் தற்போது வைகோ தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Vaiko urges Union Minister to ban Samantha The Family Man 2 web series

இயக்குனர் ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள 'தி ஃபேமிலி மேன்' இணையதள தொடரின் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, தற்போது இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டுள்ளது. குற்றச் செயல்களை கண்டறிந்து தடுப்பது போலவும், சென்னையில் குண்டு வெடிப்பிற்கு இலங்கையைச் சேர்ந்த தீவிரவாதிகள் திட்டமிட படுவது போன்றும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்: லெஜெண்ட் சரவணன் அருளுக்கு ஜோடியாக நடிக்க... பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதலாவுக்கு இத்தனை கோடி சம்பளமா?
 

Vaiko urges Union Minister to ban Samantha The Family Man 2 web series

இந்த காட்சிகளில் இலங்கையைச் சேர்ந்த தீவிரவாத தமிழ் பெண்ணாக சமந்தா நடித்துள்ளார். கடந்த 2 தினங்களுக்கு முன் வெளியான ட்ரைலரில் இருந்து இந்த தகவல் தெரியவந்தது. மேலும் இந்த வெப் சீரிஸுக்கு தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போது, மதிமுக தலைவர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது... 

மேலும் செய்திகள்: துளியும் கவர்ச்சிக்கு காட்டாமல்... அழகால் மனதை கரைய வைக்கும் க்ரித்தி ஷெட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்...
 

Vaiko urges Union Minister to ban Samantha The Family Man 2 web series

"The Family Man 2 என்ற இந்தித் தொடர் ஒளிபரப்புவதை நிறுத்தக்கோரி இந்தக் கடிதத்தை எழுதி இருக்கின்றேன். இந்தி மொழியில் வெளியாகும் இந்தத் தொடரின் ட்ரைலர் காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. தமிழர்களைப் பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்: நயன்தாராவை அடுத்து தடுப்பூசி சர்ச்சையில் சிக்கிய கீர்த்தி சுரேஷ்! ஊசியே காணும் என்று கலாய்க்கும் நெட்டிசன்கள்!
 

ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ்ப் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக்காட்சிகள் இருக்கின்றன. இத்தகையக் காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்தத் தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

Vaiko urges Union Minister to ban Samantha The Family Man 2 web series

அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். The Family Man 2 தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கோரிக்கை வைத்துள்ளார். இந்த ட்ரைலர் வெளியான சில தினங்களிலேயே சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios