தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகள்.. திரும்ப பெறப்படுகிறதா? வாகை சந்திரசேகர் பகீர் பேட்டி!

2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் இன்னும் அறிவிக்கப்படாதது குறித்தும், கடந்த முறை வழங்கப்பட்ட  கலைமாமணி விருதுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து... நடிகரும், இயல், இசை, நாடக குழுவின் தலைவருமான வாகை சந்திரசேகர் பேட்டியளித்துள்ளார்.
 

vaagai chandrasekar about kalaimaamani award controversy

ஒவ்வொரு ஆண்டும் இயல், இசை, நாடகம், ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு சார்பில் கலைமாமணி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. வயது வரம்பின்றி இந்த விருதுகள் வழங்கப்பட்டாலும்... ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு சிறப்புகளுடன் வழங்கப்படுவது தனி சிறப்பு எனலாம். அந்த வகையில் அந்த வகையில் கலை இளைமணி, கலை வளர்மணி, கலை சுடர்மணி, கலை நன்மணி, கலை முதுமணி என பிரித்து வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த ஆயிரத்து 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான கலை மாமணி விருது வழங்கப்பட்ட போது, அதில் தகுதி இல்லாத பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தது. இது குறித்து நெல்லையைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி...  கலை பற்றி தெரியாதவர்களுக்கெல்லாம் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வேதனை என தெரிவித்திருந்தார்.

விவாகரத்து பின் ஹீரோயின்களுக்கே சவால் விடும் அழகில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! லைக்குகளை குவிக்கும் போட்டோ!

vaagai chandrasekar about kalaimaamani award controversy

நீதிபதியின் கருத்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், 2021 ஆம் ஆண்டு வழங்கப்பட உள்ள கலைமாமணி  விருதுகள் குறித்தும், தமிழ்நாடு சுற்றுலா மற்றும் இயல், இசை, நாடக துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற தலைவர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

'கயல்' சீரியலை விட்டு விலகுகிறாரா ஹீரோ சஞ்சீவ்? குழப்பத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி பதிவு..!

இந்நிலையில் தமிழ்நாடு இயல், இசை நாடக, மன்ற தலைவர் வாகை  சந்திரசேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது... இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது, அப்போது திமுக அரசு பதவி ஏற்ற பின்னர்,    இதுவரை கலை மாமணி விருதுகள் வழங்கப்படவில்லை. விருதுகளுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். எனவே இதற்காக அமைக்கப்பட்ட குழுவினர் தகுதியான நபர்களை தேர்வு செய்து வருகின்றனர். கண்டிப்பாக விருது சரியான நபர்களுக்கு தான் சென்றடையும் என பேசியுள்ளார். அதேபோல் 2019 - 2020 விருதுகள் தகுதி இல்லாத நபர்களுக்கு, வழங்கப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக...  இதற்கு முன் வழங்கப்பட்ட விருதுகள் குறித்து சமர்ப்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios