நாட்டு நாட்டு பாடலுக்கு நாக்குத்தள்ள ஆட்டம் போட்ட உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் - வைரலாகும் வீடியோ
ஆஸ்கர் விருது வென்ற நாட்டு நாட்டு பாடலுக்கு உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் ஆட்டம் போட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். கொமரம் பீம் மற்றும் சீதாராம ராஜு என்கிற சுதந்திர போராட்ட வீரர்களின் நட்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தில் ராம்சரண் சீதாராம ராஜுவாகவும், ஜூனியர் என்.டி.ஆர் கொமரம் பீம் ஆகவும் நடித்திருந்தனர். மேலும் ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஸ்ரேயா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து இருந்தது.
கடந்தாண்டு மார்ச் மாதம் ரிலீஸ் ஆகி மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி இருந்தது. அதுமட்டுமின்றி ஜப்பான் கடந்த 20 ஆண்டுகளாக அதிக கலெக்ஷன் அள்ளிய இந்திய திரைப்படம் என்கிற சாதனையை தக்க வைத்திருந்த ரஜினிகாந்தின் முத்து பட சாதனையை ஆர்.ஆர்.ஆர் முறியடித்து முதலிடம் பிடித்துள்ளது.
இதையும் படியுங்கள்... குவியும் பட வாய்ப்புகளால் குஷியில் குந்தவை! விஜய், அஜித், தனுஷ் படம் உள்பட திரிஷா கைவசம் உள்ள அரை டஜன் படங்கள்
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியது. இதன்மூலம் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய திரைப்பட பாடல் என்கிற சாதனையையும் இப்பாடல் படைத்துள்ளது. இப்பாடலுக்கு இசையமைத்த கீரவாணி மற்றும் பாடல்வரிகளை எழுதிய சந்திரபோஸ் ஆகியோருக்கு ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்ற பின்னர் இப்பாடல் உலகளவில் கவனம் பெற்று உள்ளது. அதன்படி பல்வேறு நாடுகளில் இப்பாடலை ரீ-கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது உக்ரன் நாட்டு இராணுவத்தினர் நாட்டு நாட்டு பாடலை தங்கள் நாட்டு மொழியில் மாற்றி அப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு உள்ளனர்.
அச்சு அசல் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் படத்தில் எப்படி ஆடினார்களோ, அதேபோல் அந்த வீடியோவில் உக்ரைன் ராணுவத்தினர் ஆடி இருக்கின்றனர். நாட்டு நாட்டு பாடல் உக்ரைன் நாட்டில் தான் படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஜாதி பார்க்காமல் காதல்... பாதியில் நின்றுபோன திருமணம் - அஜித் மச்சானுக்கு இப்படி ஒரு சோகமான காதல் கதை இருக்கா!