தமிழில் 'உடுக்கை' என்கிற படத்தை இயக்கி வந்த, இயக்குனர் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் பாலமித்திரன் தற்போது 'உடுக்கை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விபின், சஞ்சனா சிங், அங்கிதா, மொட்டை ராஜேந்தரின், மயில் சாமி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை பாம்பன் புரோடுக்ஷன் மற்றும் BMR பிலிம் பேக்டரி இணைத்து தயாரித்து வந்தது.

கடந்த வருடம் இந்த படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு பணிகள் பிரமாண்டமாக நடந்து வந்த நிலையில், இன்னும் படத்தின் படப்பிடிப்பு பணி முடிய 5 நாட்களே உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் பாலமித்திரன்   நேற்று (9.6.2020) திடீரென்று மரணமடைந்தார். 

மேலும் செய்திகள்: ஜெயம் ரவியின் சூப்பர் ஹிட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சாய் பல்லவி..! வைரலாகும் புகைப்படங்கள்..!
 

இவர், இயக்குனர் சுகி மூர்த்தியிடம் உதவியாளராகப் பணிபுரிந்துள்ளார்.கடந்த சில மாதங்களாக, பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். உடல்நிலை மேலும் மோசமானதாலும், பண வசதியில்லாத காரணத்தாலும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் மூலமாக காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

அவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். பாலமித்ரனின் உடல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் என்ற அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. இவரின் மறைவு, திரையுலகை சேர்ந்தவர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.