பாலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும், போனி கபூர். கடந்த ஒரு சில வருடங்களாக தமிழ் படங்கள் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் நடிகர் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான, 'பிங்க்' படத்தின் ரீமேக்கை, தமிழில் நடிகர் அஜித்தை வைத்து 'நேர்கொண்ட பார்வை' என்கிற பெயரில் ரீமேக்  செய்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இந்திய திரையுலகின் முன்னணி தயாரிப்பாளராக வலம் வருபவர் போனி கபூர். இவர் மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர்  ஆவார். இவரது மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். போனி கபூர் தமிழில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து தற்போது ‘வலிமை’ படத்தை தயாரித்து வருகிறார். தற்போது மீண்டும் கூட்டணி அமைத்துள்ள போனி கபூர் - ஹெச்.வினோத்- அஜித் ஆகியோர் வலிமை படத்தை எடுத்து வருகின்றனர். கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் மகாராஷ்டிராவில் உள்ள க்ரீன் ஏக்கர்ஸ் ஏரியாவில் வசித்து வருகின்றனர். அந்த வீட்டில் 23 வயதான  சரண் சாஹு என்பவருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போனி கபூர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சனிக்கிழமை மாலை முதல் சரண் உடல்நலம் சரியில்லாமல் இருந்தார் எனவும், அவரை பரிசோதனைக்கு அனுப்பிவிட்டுத் தனிமைப்படுத்தி வைத்திருந்த்தாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பரிசோதனை முடிவுகள் வந்ததும், மும்பை மாநகராட்சிக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து  அதிகாரிகள், சரணை தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

அதோடு, "நான், என் மகள்கள் வீட்டிலிருக்கும் மற்ற பணியாளர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறோம். யாருக்கும் எந்த அறிகுறிகளும் இல்லை. உண்மையில் ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்து நாங்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. நடவடிக்கை எடுத்த மகாராஷ்டிர அரசுக்கும், மும்பை மாநகராட்சிக்கும் நன்றி. மும்பை மாநகராட்சி மற்றும் அதன் மருத்துவக் குழு தந்துள்ள அறிவுறுத்தல்களை நாங்கள் கண்டிப்பாக பின்பற்றுவோம். சரண் விரைவில் குணமடைந்து எங்கள் வீட்டுக்குத் திரும்புவார் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: இந்த நடிகையால் மட்டும் எப்படி?... புடவையில் கூட தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டும் அர்ச்சனா குப்தா!

இருப்பினும், போனி கபூர், ஜான்வி மற்றும் குஷி உள்ளிட்ட வீட்டில் இருந்த பணியாளர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சரணுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதும், போனிகபூர் வீட்டில் உள்ள அனைவருக்கும் சோதனைகள் செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் போனிகபூர் மற்றும் அவர்களது 2 மகள்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. ஆனால் அந்த வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.