இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'பிகில்' திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தாலும், எதிர்பார்த்தது போல் இல்லை என சில விமர்சனங்களும் எழுந்தது.

மேலும், இந்த படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்தது. தற்போது பலரது மொபைல் போனுக்கு காலர் டியூனாகவும் மாறியுள்ளது.

குறிப்பாக, சிங்கப்பெண்ணே மற்றும் வெறித்தனம் ஆகிய இரண்டு பாடங்கள், சமூக வலைத்தளத்தில் பல ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.

இது ஒரு புறம் இருக்க, தற்போது இந்திய அளவில் 'பிகில்' திரைப்படம் புதிய சாதனையை  படைத்துள்ளது. ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்திய அளவில் அதிக அளவு பயன்படுத்த படுத்துள்ள ஹாஷ்டாக்கில், 'பிகிலுக்கு' 6 வது இடம் கிடைத்துள்ளது.

முதல் இடத்தில், 'லோக்சபா எலெக்ஷன் 2019 , இரண்டாவது இடத்தில் சந்திராயன் 2 ஆகியவை பிடித்துள்ளது.

ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ள தகவல் இதோ...