tv channels original face showed in the film kavan
சமீபத்தில் திரைக்கு வந்து மக்களிடயே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் கவண். காரணம் எப்பொழுதும் சம்திங் டிஃப்ரன்ட்டா நடிக்கும் ட்ரெண்டு ஹீரோ விஜய் சேதுபதி.
ஒவ்வொரு படத்திலும் ஒரு வித்தியாசம் காண்பிக்கும் விஜய் சேதுபதி, இந்த படத்திலும் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.
அதாவது டிவி சேனல்களில் நடக்கும் ரியாலிட்டி ஷோக்களில், எப்படியெல்லாம் கோல்மால் செய்கிறார்கள் என்பதை துல்லியமாக புட்டு புட்டு வைத்துள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்
தற்போது 25 கோடி வரை வசூல் செய்து, வெற்றி படமாக இன்னமும் திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும் கவண் படத்தின் வெற்றி விழா நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த இயக்குனர் ஆனந்த், லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி டி.வி. ரியாலிட்டி ஷோவில் நடந்த நிகழ்வை தான் இந்த படத்தில் சுட்டிக்காட்டியதாக தெரிவித்தார்.
மைண்ட் வாய்ஸ்: ஏம்ம்பா கே. வி.ஆனந்த்... நீங்க சொல்றது நம்பர மாதிரியா இருக்குனு... பலரும் லைட்டா சிரிச்சி இருக்காங்க....
