இன்டர்நெட் உலகில் தமிழ் சினிமா தள்ளாடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் கூட கோடிகளில் சம்பளம் வாங்குவதை முன்னணி நடிகர், நடிகைகள் கைவிடுவது இல்லை. கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்து படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் போட்ட காசை எடுக்க படாதபாடு படுகின்றனர். 

இதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..!

ஒரு சினிமாவை வசூல் சாதனை படைக்கவைக்க சிறந்த கதை, நடிகர்கள் தேர்வு மட்டும் போதாது கூடவே மார்க்கெட்டிக் டெக்னிக்கும் வேண்டும். அதற்காக தான் தயாரிப்பாளர்கள் படம் வெளியாவதற்கு முன்னதாகவே இசை வெளியீட்டு விழா, பிரஸ் மீட் ஆகியவற்றை ஏற்பாடு செய்து படத்தை விளம்பரப்படுத்துகின்றனர். 

தமிழில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட பலரும் தங்களது படம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். ஆனால் நடிகர் அஜித்தோ இது போன்ற நிகழ்ச்சிக்கு தம்மை அழைக்க வேண்டாம் என்று கூறிவிடுவதால் அவருடைய படத்திற்கு இசைவெளியீட்டு விழா கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறவில்லை. 

இதையும் படிங்க: படுக்கையறையில் நண்பருடன் கிளுகிளுப்பு குத்தாட்டம் போட்ட ஷெரின்... வைரலாகும் வீடியோ...!

இதே போன்று லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாராவும் பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். சூப்பர் ஸ்டாரின் தர்பார், தளபதி விஜய்யின் பிகில் ஆகிய படங்களின் ஆடியோ ரிலீஸ் பங்ஷனில் நயன் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை கிளப்பியது.  

இந்நிலையில் சென்னை சத்யம் திரையரங்கில் பரமபதம் விளையாட்டு படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் நாயகியான த்ரிஷா கலந்துகொள்ளவில்லை. இதனால் நிகழ்ச்சிக்கு வந்த மற்ற பிரபலங்கள் திரிஷாவுக்கு கண்டனம் தெரிவித்தனர். நடிகை திரிஷா பட புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் சம்பளத்தில் ஒரு பகுதியை திருப்பித்தர வேண்டியிருக்கும் என்று தயாரிப்பாளர் சிவா எச்சரிக்கை விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உச்ச நடிகர்கள் ரஜினி, விஜய் திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்கு வரும் போது இவர்களுக்கு என்ன பிரச்சினை? என்று சாடினார். 

இதையும் படிங்க: முன்னழகு தெரிய விட்டு முரட்டு போஸ்... அடா சர்மா... கவர்ச்சி காட்டுவதில் இவரை போல வருமா..?

இதனைத் தொடர்ந்து பட புரோமோஷனுக்கு வராத நடிகர்கள், நடிகைகளை இனி படங்களில் நடிக்க வைக்க கூடாது என்று முடிவு செய்ய வேண்டும் என்று அதிரடியாக பேசிய அவர், இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.