தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ள நயன், செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். பிகில், தர்பார் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து முடித்த நயன், அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்திலும் நடித்துமுடித்துவிட்டார். 

இதையும் படிங்க: பூர்வீக கிராமத்தில் தஞ்சமடைந்த தனுஷ்... குலதெய்வம் கோவிலில் குடும்பத்துடன் வழிபாடு...!

அடுத்ததாக சூப்பர் ஸ்டாரின் தலைவர் 168 படத்தில் கைகோர்த்துள்ள நயன்தாரா, அந்த படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை நடித்து முடித்ததும், அடுத்ததாக காதலர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள காத்து வாங்குல இரண்டு காதல் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம் நயன்தாரா.

இதையும் படிங்க: "பிகில்" பாண்டியம்மாளா இது?.... ஸ்டன்னிங் மார்டன் லுக்கில் அசத்தும் புகைப்படங்கள்...!

இந்நிலையில் தலைவர் 168 படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஐதராபாத் விமான நிலையம் சென்ற நயன்தாராவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் நிலையில், நயன் அந்த படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கண்ணுல ஸ்டைலாக கூலிங்கிளாஸ், புளூ கலர் போல்கா  டாட்டடூ மேக்ஸி டிரெஸில் செம்ம கெத்தாக ஐதராபாத் இன்டர்நேஷனல்  விமான நிலையம் வந்தடைந்த நயன்தாராவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. 

ஓவர் மேக்கப் இல்லாமல் எளிமையான டிரஸ், நார்மல் மேக்கப்புடன் திரும்ப, திரும்ப பார்க்க தூண்டும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் போட்டோஸ் இதோ....