தலைமறைவாகும் ஆள் நான் இல்லை! திரிஷா சர்ச்சையில்... காவல் நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான்!
நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசிய சர்ச்சை விவகாரம் தொடர்பாக, இன்று மாலை 2:30 மணிக்கு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் கொடுத்து வருகிறார் மன்சூர் அலிகான்.
நேற்றைய தினம் நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், இன்று வெளியான தகவலில் மன்சூர் அலிகான் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சற்றுமுன் வெளியாகி உள்ள தகவலில், இன்று மதியம் 2:30 மணிக்கு... ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் ஆஜராகி விளக்கம் கொடுத்து வருகிறார். உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு ஆஜராகி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் முன்ஜாமின் வாங்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அதனை வாபஸ் பெற்று விட்டதாகவும் தலைமறைவாகும் ஆள் நான் இல்லை என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பல பிரபலங்கள் மன்சூர் அலிகானுக்கு எதிராக கண்டனம் தெரிவித்த நிலையில், நடிகை திரிஷா எக்ஸ் தளத்தின் மூலம் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்து இருந்தார். அதே போல், தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபியை அறிவுறுத்திய நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மன்சூர் அலிகான் மீது ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
Suriya: விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா! மருத்துவமனையில் அனுமதி.!
நேற்றைய தினம் நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் கொடுக்க வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், இன்று வெளியான தகவலில் மன்சூர் அலிகான் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சற்றுமுன் வெளியாகி உள்ள தகவலில், இன்று மதியம் 2:30 மணிக்கு... ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் ஆஜராகி விளக்கம் கொடுக்க உள்ளதாகவும், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் முன்ஜாமின் வாங்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், அதனை வாபஸ் பெற்று விட்டதாகவும் தலைமறைவாகும் ஆள் நான் இல்லை என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.