சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மாபெரும் வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’
சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், கமலேஷ், மிதுன் ஜெய்சங்கர் போன்ற பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. கடந்த மே ஒன்றாம் தேதி வெளியான இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று, அகதிகளாக வந்து தமிழ்நாட்டில் சந்திக்கும் சவால்களை காமெடி கலந்த உணர்ச்சிபூர்வமான படமாக எடுக்கப்பட்டிருந்தது.

ரூ.75 கோடி வசூலை குவித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’
படம் வெளியாகி நான்கு வாரங்களை கடந்த போதிலும் இன்னமும் திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது. சுமார் ரூ.7 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த திரைப்படம், மூன்று வாரங்களில் 10 மடங்கிற்கும் அதிகமான வசூலை அதாவது ரூ.75 கோடி வசூலித்து இருந்ததாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படம் எப்பொழுது ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு
படம் வருகிற ஜூன் இரண்டாம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
