லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் முதன் முறையாக இணைந்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் கொரோனா பிரச்சனையால் பாதிக்கப்பட்டது.

 

இடையில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக வதந்தி பரவியது. ஆனால் தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து வெளியான அறிக்கையில், நிச்சயம் படம் தியேட்டரில் வெளியிடப்படும் என உறுதி அளித்தனர். கொரோனாவால் 2020ம் ஆண்டு வெளியாக வேண்டிய படத்தை பொங்கல் விருந்தாக 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

இதையும் படிங்க: ஸ்டன்னிங் லுக்கில் சமந்தா... இணையத்தையே ஸ்தம்பிக்க வைத்த தாறுமாறு போட்டோஸ்...!

தீபாவளி விருந்தாக மாஸ்டர் திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. டீசர் வெளியான சில மணி நேரங்களில் இருந்து இன்று வரை பல்வேறு சாதனை படைத்து வருகிறது. இதுவரை இந்த டீசர் 47 மில்லியன் views பெற்றுள்ளது. 2.5 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி எந்த படத்திற்கும் கிடைக்காத அளவிற்கு மாஸ்டர் டீசர் 510K கமெண்ட்களை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி 2020ம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் #Master முதலிடம் பிடித்தது.  

 

இதையும் படிங்க: பட்டு பாவாடை சட்டையில் ‘குட்டி’ நயன் அனிகா... மிடுக்கான போஸில் மிரள வைக்கும் போட்டோஸ்...!

இதனிடையே நாளை மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தில் தெலுங்கு மொழி டீசரை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் ரசிகர்களை போல் தெலுங்கு தளபதி ஃபேன்ஸ் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்...!