இந்தியாவில் ஒரே நாளில், கொரோனா வைரஸால் அதிக நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.உலக அளவில் பெரும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி  வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸால் பாதிக்க படுபவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவதால், மே 3 ஆம் தேதி, ஊரடங்கு உத்தரவு தளர்த்த படுமா என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: அட கன்றாவி... ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் மொத்ததையும் காட்டிய மீரா மிதுன்...!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக, 1993  பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் கொரோனா தாக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  இதுவரை  67  பேர் பலியாகி உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் 564 பேர் பூரண பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். கண்ணுக்கு தெரியாத கொடிய அரக்கனுடன் போராடி வரும் மத்திய, மாநில அரசுகளுக்கு உதவும் வண்ணம் பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: கண்ணீர் விட்டு கதறிய நயன்தாரா... இயக்குநர் காலில் விழுந்து அழுத வைரல் வீடியோ...!

பெரும் நிறுவனங்கள், தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், திரைத்துறை பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் தங்களால் இயன்ற நிதியை முதலமைச்சர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் கொரோனா நிவாரணத்திற்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி யூ-டியூப் நிறுவனம் நடத்தும் ஒன் நேஷன் (one nation) என்ற நிகழ்ச்சியில் இன்று இரவு 8.52 மணிக்கு பாடவுள்ளார். அதன் மூலம் கிடைக்கும் நிதியை கொரோனா நிவாரணத்திற்கு வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.