சீன பொழுது போக்கு செயலிகள் மூலம், பலர் பிரபலமடைந்துள்ளனர். டிக் டாக், ஹெலோ  போன்றவற்றில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்தி, சிலர் வெள்ளித்திரையில் நடிகர், நடிகையாகவும் மாறியுள்ளனர். அந்த வகையில், கருத்தே இல்லாமல், காமெடி என்கிற பெயரில் கண்டதை பேசி பலரிடம் சகட்டு மேனிக்கு திட்டு வாங்கியே பிரபலமானவர் தான் ஜி.பி.முத்து.

மேலும் செய்திகள்: அழகிய இன்டீரியர் ஒர்க்... பிரமாண்டமாய் இருக்கும் நடிகை சுஹாசினி மணிரத்னம் வீடு! வாங்க பார்க்கலாம்...
 

அதிலும், செத்த பயலே... நாரா பயலே என,  இவர் தன்னை கழுவி கழுவி ஊற்றியவர்களுக்கு கமெண்ட் செய்து திட்ட, அதற்கு ஒரு படி மேல் போய், கேட்க முடியாத வார்த்தைகளால் இவரை அவர்கள் திட்டுவார்கள். போர் அடிக்கும் போதெல்லாம் திட்டி... திட்டு... விளையாடுவது தான் இவர்கள் பொழப்பே...

எப்படியோ இவர் முகம் அனைவருக்கும் தெரிய துவங்கியதும், இவர் ரவுடி பேபி சூர்யாவுடன் செய்த காதல் லீலைகள் பல. சூர்யா ஜி.பி.முத்துவை மாமா என அழைக்க, அதற்கு இவர் அன்பே... ஆருயிரே என உருகிய வீடியோக்கள் டிக்-டாக்கில் ரொம்ப பிரபலம். சூர்யாவுடனான ஜிபி முத்துவின் நெருக்கத்தை பார்த்து டிக்-டாக்கில் அவருடன் மல்லுக்கு நிற்காத ஆட்களே கிடையாது. 

மேலும் செய்திகள்: கைதி படத்தில் கார்த்திக்கு பதிலாக நடிக்க இருந்தது இந்த நடிகரா?... செம்ம ஷாக்கிங் நியூஸ்...!
 

இந்நிலையில், இப்படி தினமும் டிக்-டாக் பல பஞ்சாயத்துக்களை வாண்டடாக போய் சந்தித்து வந்த இவர்களை போன்ற பலருக்கு டிக்-டாக் இல்லாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களது திறமையை வெளிக்காட்டும் இடமாக இருந்த, சீன செயலிகளை இந்தியாவில் மொத்தம் 14 மொழிகளில் செயல்பட்டு வந்தவை தடை செய்யப்பட்டதால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது ஜி.பி.முத்து, இதுகுறித்து பேசுகையில்... டிக் டாக் தடை செய்ததால் நெஞ்சு வலிப்பதாக கதறியுள்ளார். எனவே இனி சிங்காரி செயலியை தான் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். டிக் டாக் செயலியை தடை செய்துள்ளது மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: நடிகை பூர்ணா விவகாரத்தில் சிக்கிய காமெடி நடிகர்? அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி...!
 

கொரோனா பயத்தில்... உலகமே மன உளைச்சலில் உள்ள நிலையில்... இவருக்கு டிக் டாக் தடை செய்துவிட்டதால் நெஞ்சு வலிக்கிறதாம்... என்ன சொல்வது...? நீங்களே இவருக்கு ஒரு நல்ல பதில் சொல்லுங்க...