Asianet News TamilAsianet News Tamil

கைதி படத்தில் கார்த்திக்கு பதிலாக நடிக்க இருந்தது இந்த நடிகரா?... செம்ம ஷாக்கிங் நியூஸ்...!

'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'கைதி'. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இந்த படம் தந்தை - மகள் செண்டிமென்ட்டுடன், ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அசத்தலான வரவேற்பை பெற்றது. 
 

kaithi movie story is writing for mansooralikhan then committed karthi
Author
Chennai, First Published Jul 1, 2020, 12:19 PM IST

'மாநகரம்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 'கைதி'. தீபாவளி ஸ்பெஷலாக வெளியான இந்த படம் தந்தை - மகள் செண்டிமென்ட்டுடன், ஒரே இரவில் நடக்கும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அசத்தலான வரவேற்பை பெற்றது. 

மேலும் செய்திகள்: அழகிய இன்டீரியர் ஒர்க்... பிரமாண்டமாய் இருக்கும் நடிகை சுஹாசினி மணிரத்னம் வீடு! வாங்க பார்க்கலாம்...
 

விஜய்யின் 'பிகில்' என்ற பிரம்மாண்ட படத்துக்கு போட்டியாக வந்தததால் 'கைதி' படத்திற்கு, ஆரம்பத்தில் 250 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால், மிக குறைந்த தியேட்டர்களிலேயே வெளியான 'கைதி' படம், ரசிகர்களிடம் கிடைத்த அமோக வரவேற்பால், பின் 350 தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

kaithi movie story is writing for mansooralikhan then committed karthi

பாடல், ஹீரோயின் இல்லாமல் முழுவதும் கதையை மட்டுமே நம்பி களமிறங்கிய 'கைதி' திரைப்படம் சத்தமே இல்லாமல் பல சாதனை படைத்தது. உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி 'கைதி' படம், பாக்ஸ் ஆஃபிசில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இதுவரை நடிகர் கார்த்தியின் எந்த படமும் செய்யாத சாதனையை கைதி படம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: ரஜினி... டெண்டுல்கர்... ஷாருக்கான் அடுக்கடுக்காய் வந்த வாய்ப்பை உதறி தள்ளிய பெப்சி உமா... அரிய தகவல்!
 

மேலும் உலக அளவில் முதல் முறையாக 100 கோடி ரூபாய் வசூல் செய்த கார்த்தியின் திரைப்படம் என்ற பெருமையை கைதி பெற்றது. வெறும் 25 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட கைதி திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பால் மாபெரும் வெற்றி அடைந்தது. 

kaithi movie story is writing for mansooralikhan then committed karthi

இதன்மூலம், நல்ல கதையுடன் தரமான படமாக இருந்தால், எப்படிப்பட்ட சூப்பர் ஹீரோவின் பிரம்மாண்ட படத்திற்கு போட்டியாக வந்தாலும் ஜெயித்து விடலாம் என்பதை தமிழ் திரையுலகிற்கு 'கைதி' படத்தின் மூலம் உணர்த்தினார் லோகேஷ் கனகராஜ்.  

மேலும் செய்திகள்: தாடி பாலாஜி மகள் போஷிகா இவ்வளவு பெருசா வளந்துட்டாங்களா? அம்மாவுடன் சேர்ந்து செய்த அட்ராசிட்டி..!
 

kaithi movie story is writing for mansooralikhan then committed karthi

இப்படி பல சாதனைகள் படைத்த, கைதி படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வில்லன் நடிகர் மைசூர் அலிகானை நினைவில் வைத்து தான் எழுதினாராம். தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதால் இந்த படத்தில் மன்சூரலிகானுக்கு பதில், கார்த்தி நடித்ததாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios