Asianet News TamilAsianet News Tamil

'டைகர் 3' படத்திற்காக.. குளியலறையில் டவல் கட்டிக்கொண்டு சண்டை போட்ட கேத்ரினா கைஃப்! மிஷ்ஷேல் லீ கூறிய தகவல்!

டைகர் 3 படத்தில் பாத்ரூமில் சண்டை போட்டது குறித்து ஹாலிவுட் நடிகை மிஷ்ஷேல் லீ பகிர்ந்து கொண்டுள்ள தகவல் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Tiger 3 actress Michelle Lee talking about towel fight mma
Author
First Published Oct 27, 2023, 6:14 PM IST

 ‘டைகர் 3’ படத்தின் டிரைலரிலிருந்து அந்த டவல் சண்டைக்காட்சி மிகப்பெரிய பேசுபொருளாக ஆகியிருக்கிறது என்பதில் மிஷ்ஷேல் லீக்கு பெரிய ஆச்சர்யம் எதுவும் இல்லை.. கத்ரீனாவும் தானும் இந்த காட்சியை படமாக்குவதற்கு முன்னதாக இரண்டு வாரங்களுக்கு மேல் ஒத்திகை பார்த்ததாக கூறியுள்ளார் மிஷ்ஷேல் லீ.  

அவர் கூறும்போது, “நான் ஆச்சர்யப்படவில்லை. நாங்கள் இதை படமாக்கியபோது அழகான காவியமாக இருந்தது. இரண்டு வாரங்களுக்கு மேல் நாங்கள் இந்த சண்டைக்காட்சியை கற்றுக்கொண்டதுடன் பயிற்சியும் எடுத்துக்கொண்டு அதன் பின்னரே இதை படமாக்கினோம். இதற்காக வடிவமைக்கப்பட்ட அரங்கு உண்மையிலே அழகியலாக இருந்ததுடன் இந்த சண்டைகாட்சியில் நடிப்பதற்கு உண்மையிலேயே வேடிக்கையாகவும் இருந்தது. 

Tiger 3 actress Michelle Lee talking about towel fight mma

Thangalaan: 'தங்கலான்' படத்தின் ரிலீஸ் தேதியுடன்.. முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இன்பஅதிர்ச்சி கொடுத்த படக்குழு

ஆக்சன் காட்சிகளில் நடிக்கும்போது கத்ரீனாவின் அர்ப்பணிப்பு உணர்வை பார்த்து அவரை இன்னும் புகழ்ந்து தள்ளுகிறார் மிஷ்ஷேல். அவர் கூறுகையில், “கத்ரீனாவால் அழகாகவும் தொழில்முறை நடிகையாகவும் இருக்க முடிந்தது. துல்லியமான நகர்வுகளை பெற கடினமாக அவர் உழைத்ததுடன் அனைத்து நகர்வுகளுமே வேகமாக இருப்பதையும் அவர் உறுதி செய்தார். நடனத்தில் அவருக்கு அனுபவம் இருந்ததால் அவருடன் இணைந்து பணியாற்றுவது ரொம்பவே எளிதாக இருந்தது. நாங்கள் வியர்வை சிந்தி உழைத்தோம்” என்கிறார்.. 

Tiger 3 actress Michelle Lee talking about towel fight mma

Malavika: சொட்ட சொட்ட தண்ணீரில் நனைந்து ஜலக்ரீடை பண்ணும் மாளவிகா மோகனன்! சைடு போஸில் சொக்க வைத்த போட்டோஸ்!

தொடர்ந்து பேசிய மிஷ்ஷேல் டவல்களால் அவர்களது உடல்களை சுற்றிலும் மறைத்தபடி இந்த குளியலறை காட்சியில் நடித்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது என்கிறார் மேலும் அவர் கூறும்போது எங்களது டவல்கள் குறிப்பிட்ட சரியான இடங்களில் பொருந்தியிருக்க வேண்டியிருந்தது. அதனுடன் அதிகப்படியான நகர்வுகளுடன் இந்த சண்டைக்காட்சியை படமாக்கியது நிச்சயமாக ஒரு சவால் தான். சில நேரங்களில் டவல்களின் முக்கிய பகுதி கிழிந்துபோய் அதை தைத்து பயன்படுத்தியதும் எங்களுக்கு உதவிகரமாக இருந்தது” என்கிறார்.

Tiger 3 actress Michelle Lee talking about towel fight mma

மேலும் அவர் கூறுகையில், “இன்னொரு சவால் என்னவென்றால் பார்ப்பதற்கு அபாயகரமானதாகவும் வலிமையானதகவும் தெரிந்தாலும் ஒருவருக்கொருவர் எங்களை காயப்படுத்தி விடாமல் இருப்பதற்காக நாங்கள் ஒருவருக்கொருவர் ஒரு சரியான தூரத்தை கடைபிடிக்க வேண்டி இருந்தது. ஒருவேளை அப்படி அவரை நிஜமாகவே நான் தாக்கியிருந்தால் உங்களால் நினைத்து பார்க்க முடிகிறதா ?. ஆனால் நான் தொழில்முறை தெரிந்தவள். அதனால் நாங்கள் எங்களை தாக்கிக்கொள்ளாமலேயே கேமரா முன்பாக அந்த வேலையை செய்ய வேண்டி இருந்தாலும், அனைத்தும் ரொம்பவே மென்மையாக நடந்தன” என்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சல்மான் கான் நடிப்பில், யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் சார்பில், ஆதித்யா சோப்ரா தயாரிப்பில் மனீஷ் சர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டைகர் 3’  திரைப்படம் இந்தவருட தீபாவளி ரிலீஸாக வரும் நவம்பர்-12ஆம் தேதி ஞாயிறன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios